பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 வேர்ச்சொல் சுவடி சடங்கு : நூன்முறை பற்றியும் வழக்கம் பற்றியும் மேற்கொள்ளும் செயற்பாடு. [சட்டம்>சடங்கு சடலம் : உடல் சடம் = உடல் [சடம்>சடலம்.] சடை-தல் : 1. சோர்வடைதல் 2. வளர்ச்சி தடைப்பட்டுப் போதல். சட்டுதல் = தட்டுதல், அடித்தல் (சட்டு>சடை - தல்.] சண்டு : 1. உள்ளீடற்ற பதர், 2. கூளம். கள்ளு-தல் = துளை விழுதல் [கள்>சள்>சண்டு] சண்டை : 1. பூசல், 2. முரண்பாடு, 3.போர். சள்ளை = தொல்லை [கள்>சண்டு>சண்டை] சணல்' : பழுப்பு நிற நாரினால் திரிக்கப்பட்ட சிறு கயிறு [சள்>சண்>சணல்.] சணல் : செடி வகை சடம்பு = நாருள்ள சணற்செடி சடை>சடம் சடம்பு] சணம் - சணல் [சடம்>சணம்>சணல்] சதை : 1. தசைப்பகுதி 2. உடைமை. [தசை>சதை] சந்தம் : 1. அழகு, 2. நிறம், 3. வடிவு, 4. மகிழ்ச்சி. அந்தம் = அழகு [அம் = அழகு. அம் அந்து அந்தம் சந்தம் சந்தனம் : 1.சந்தனமரம், 2. அரைத்த சந்தனக் குழம்பு.