பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி சாந்து = அரைத்த சந்தனம் சந்து = சந்தன மரம் சாந்து>சந்து > சந்தனம்.] சந்தி : 1. கூடுகை, 2. பல தெரு கூடுமிடம், 3. நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் இணையும்போது ஏற்படும் மாற்றம், 4. இரவும் பகலும் இணையும் மாலைப் பொழுது. உம்முதல் = கூடுதல் (உம்உந்துஅந்து அந்தி சந்தி சந்திப்பு : 1.எதிர்கை, 2. ஆறு, தெரு, பாதை முதலியன கூடுமிடம். சந்தித்தல் =எதிர்கை, இணைத்தல் (சந்தி > சந்திப்பு. "பு" சொஆ.ஈறு] சந்து': 1.பொருத்து, 2. மூட்டு, 3. பலவழி கூடுமிடம், 4. மாறுபட்ட இருவரை நட்பாக்குகை. அந்துதல் = கலத்தல் (அந்து>சந்து.] சந்து: சந்தன மரம் சாந்து = சந்தன மரம் [சாந்து >சந்து] சந்தை : பொருள்களை விற்கவும் வாங்கவும் பலரும் கூடுமிடம். அந்துதல் = கலத்தல் [அந்து >சந்து >சந்தை ] சப்பட்டை : 1. தட்டையானது, 2. உள்ளீடற்றது, 3. பதர். சப்பை = சப்பட்டையானது சப்பை>சப்பட்டை] சப்பாணி : நிலத்திற் சப்பையாய் முடவனைப் போல் அமர்ந்திருந்து கைதட்டும் குழந்தை நிலை. [சப்பு>சப்பாணி.] சப்பு-தல் : 1. சுவைத்து ஒன்றன் சாற்றை உறிஞ்சிக் குடித்தல், 2குதப்புதல். 85