பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி 86 சுப்பெனல் = நீர் முதலியவற்றை உள்ளிழுத்தற் குறிப்பு [சுப்பு>சப்பு-தல் சப்பை: 1. சப்பட்டையானது, 2.வலியற்றது. சப்புதல் = அடித்தல், தட்டுதல் [சப்பு சப்பை] சம்பளம் : 1. கூலி, 2. வழிப்பொருள். சம்பு = சிறந்த நெல்வகையின் பொதுப்பெயர் [சம்பு + அளம் = சம்பளம்] சம்பா : ஐந்து மாதக் கால நெற்பயிர் [சம்பு>சம்பா] சம்மட்டி : 1. சுத்தியல் வகை, 2. குதிரையோட்டுங் கருவி. சமட்டுதல் = அடித்தல் சமட்டி சம்மட்டி சமம் : 1. ஒப்பு, 2.ஒத்தபொருள். அம்முதல் = பொருந்துதல் [அம்சம்>சமம்] சமயம் : 1. மனத்தைப் பக்குவப்படுத்தும் மதம், 2. மதநூல். சமைதல் = பக்குவமாதல் [சமை>சமையம்சமயம்.] சமை-தல் : 1. நிரம்புதல், 2. பூப்படைதல், 3. மணஞ்செய்யத் தகுதியாதல். அமை-தல் = தகுதியாதல் [அமை>சமை -தல்.] சமை-த்தல் : 1. படைத்தல், 2. செய்தல், 3. அணியமாதல். அமை-தல் = அணியமாதல் [அமை>சமை-த்தல்.] சமையல் : 1. சமைக்கை, 2. உண்ணத் தகுதியான உணவு.