பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி அமைதல் = தகுதியாதல் [அமை>சமை>சமையல்] சரக்கு : 1. உலர்ந்த வணிகப் பண்டம், 2. கல்வியறிவு. சருகு = உலர்ந்து வற்றிய இலை [சர்> சருகு> சரக்கு} சரி-தல் : 1. சரிந்து விழுதல், 2. சாதல், 3. சரிவாய் இருத்தல். சுல் = வளைதற் கருத்துவேர் [சுல்>சுர்> சுரி> சரி-தல்.] சருக்கு-தல் : 1. சறுக்கு, 2. சரிவு. சரிவு சருவு சருகு சருகுதல் = சரிதல் சருகு>சருக்கு -தல்.] சருகு : உலர்ந்து வற்றிய இலை சுல் = சுடுதற் கருத்துவேர் [சுல்>சுள்> சுர் > சர்>சருகு] சல்லடை : தவசம் முதலியன சலிக்கும் மென்துளையுள்ள தட்டைக் கருவி. சலித்தல் = தெள்ளியெடுத்தல் [சலியடை>சல்லடை] சல்லி : 1. சிறிய கல், 2. சிறு காசு, 3. பொறுப்பற்றவன், 4 இழிந்தவன். சுல்>சில் = சிறியது [சுல்>சல்> சல்லிJ சலங்கை : சதங்கை "சல்சல்": = ஒலிக்குறிப்பு [சல்>சல>சலங்கை] சலம் : 1. சலசலவென்று ஓடும் நீர், 2. சீழ்நீர், 3. சிறுநீர் சலசல = நீரோட்டத்தைக் குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொல் [சலசல>சலம்.] சலி-த்தல் : 1. அசைதல், 2. சோர்தல், 3. வெறுத்தல், 4. சல்லடையாற் 87