பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

88 வேர்ச்சொல் சுவடி சலித்தல். [சுல்>சல்>சலி-த்தல்.] சலுகை : நெறிமுறைகளைத் தளர்த்தி வழங்கப்படும் விலக்கு [சலிகை >சலுகை.] சவட்டு-தல் : 1. காலால் மிதித்துச் சேறு குழைத்தல், 2. அழித்தல். சவள்ளுதல் = துவள்தல், குழைதல் சவள் >சவட்டு-தல்.] சவம் : 1. (நேரே நிற்கும் தன்மையற்ற) உயிரற்ற உடல், 2. பேய். சாய் = சாய்தல், சாய்ந்து விழுதல் சாய்>சா > சாவு சாவம்>சவம்] சவளி :சவண்டிருக்கும் வேட்டி சீலை முதலிய துணிச்சரக்கு சவளுதல் = துவளுதல் [கூவள்>சவள்> சவண் சவளி] சளை-த்தல் : 1. தளர்தல், 2. சோர்தல். சள்ளு-தல் = இளகுதல், சோர்தல் [கள்>சளை> சளை-த்தல்] சன்னம்: 1. நுண்மை, 2. சிறுமை சுல்>சில் = சிறியது [கல்>சல் சன்னம்] சா-தல் : 1. அழிவு, 2. இறத்தல், 3. பயிர் முதலியன கெட்டுப் போதல். சாய்வு = வளைவு, அழிவு [சாய்>சா-தல்.] சாட்டு-தல் : 1. பொறுப்பைப் பிறரிடம் சார்த்துதல், 2. குற்றஞ் சுமத்துதல். சார்த்து >சாட்டு-தல்} சாத்து : 1. வணிகக் கூட்டம், 2. கூட்டம். சாத்தல் = சேர்தல், கூடுதல்