பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [ சேர்>சார்> சார்த்து> சாத்து. சாந்து : 1. சந்தன மரம், 2. கலவைச் சந்தனம். சாத்துதல் = பூசுதல் [சர்>சார்த்து > சாத்து > சாந்து சாப்பாடு : உணவு சப்பு = வாயால் உறிஞ்சி உண்ணுதல் [சப்பு>சப்பிடு > சாப்பிடு > சாப்பாடு சாம்பல் : பொருளை எரித்த பின் மிஞ்சும் பொடித் துகள் சாம்புதல் = எரிதல் சாம்பு>சாம்பல்] சாமம் : 1. நடுச்சாமம், 2. இரவு. யாமம் = நள்ளிரவு (யாமம்>சாமம்.] சாரம் : சுவரைச் சார்ந்து கட்டும் மரம் [சார்>சாரம்] சாரல் : சாய்ந்து பெய்யும் சிறு தூறல் சார்தல் = சாய்தல் [சார்>சாரல்.] சாவு : 1. இறப்பு, 2. பிணம். சா-தல் = இறத்தல் (சாய்>சா> சாவு] சான்று : பொருந்தச் சொல்லும் எடுத்துக்காட்டு சாலுதல் = பொருந்துதல் [சால்>சான்று) சித்தி: 1.சிறியதாய், 2. சித்தப்பாவின் மனைவி, 3. தாயின் தங்கை. சிற்றாய்>சித்தாய்>சித்தி] 89