பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

90 வேர்ச்சொல் சுவடி சித்திரம்: 1. ஓவியம், 2. அழகு செத்தல் = ஒத்தல், செத்து = ஒத்து, போல செ+ திரம் - செத்திரம் சித்திரம். சித்திரி-த்தல்: 1.சித்திரமெழுதுதல், 2. வண்ணித்துப் (அழகாகப்) பேசுதல். [ சித்திரம்>சித்திரி-த்தல்.] சித்து : 1. அறிவு, 2. அறிவுடைப் பொருள். செத்து = அறிவு [ செ> செத்து> சித்து.] சிதடன் : 1. குருடன், 2.அறிவிலி. சிதடு = குருடு சிதடு சிதடன்.] சிதர்-தல்: 1. சிதறுதல், 2. காலாற்கிளைத்தல். சிதைத்தல் = குலைத்தல் சிதை> சிதர் -தல்] சிதை-த்தல் : 1. கெடுதல், 2. அழித்தல், 3. நசுங்குதல். [சிதர்த்தல் = பிரித்தல், குலைத்தல் சிதர்> சிதை -த்தல்.] சிந்தனை : எண்ணம், படித்த பாடத்தை மீண்டும் நினைக்கை. சித்து = அறிவு, கருத்து, கருதியதை அடையும் திறம் (முதா184) சித்து> சிந்து > சிந்தை > சிந்தனை சிந்தி-த்தல்: நினைத்தல் சித்து = அறிவு, கருத்து, கருதியதை அடையும் திறம் (மு.தா.184) சித்து> சிந்து > சிந்தி-த்தல் சிந்து-தல்: கொட்டியொழுகுதல்