பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

92 வேர்ச்சொல் சுவடி சிரந்தை: உடுக்கை சிரற்று > சிரற்றை சிரத்தை >சிரந்தை.] சிராய்-தல்: உராய்ந்து ஊறுபடுதல் உராய்> சிராய்-தல்.] சிரிப்பு : நகைப்பு சில் = குளிர் [சில்> சிர் > சிரி சிரிப்பு] சில்: சிறுதுண்டு சுல் = வளைதற் பொருள் [சுல்> சில்] சில்லறை: சிறுதொகையாக மாற்றும் பணம் சில் + அறு - சில்லறு > சில்லறை] சில்லு : துண்டு, உடைந்த கற்சில். சில் = சிறியது [சில்> சில்லு.] சிலந்தி : தன் வாயிலுள்ள சுரப்பைக் கொண்டு பூச்சிகளைச் சிக்க வைக்கும் வகையில் வலை பின்னக்கூடியதும் எட்டுக் கால்களை உடையதுமான சிறுபூச்சி. சில் = வளைதற் கருத்துவேர் [சில்> சிலந்தி] சிலர்: சிலபேர் [சில்> சில + அர்.] சிலிர்-த்தல்: 1. உடல் புல்லரித்தல், 2. தளிர்த்தல். உல்லரி = தளிர், உல்லரி> (உலிர்)> இலிர். இலிர்த்தல் = தளர்தல் [இலிர்> சிலிர்-த்தல்.] சிலுக்கு : 1. வாள் முதலிவற்றின் பல், 2. வெட்டிய சிறுதுண்டு. சில் = துண்டு, வட்டம், வட்டப்பொருள். [சில்> சிலுக்கு = வெட்டின துண்டு