பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி சிலுப்பு-தல்: 1. சுழற்றுதல், 2. தயிர் கடைதல். சுல் = வளைதற் பொருள் [கல்> சில்> சிலுசிலுப்பு-தல்.] சிலை : வெட்டிய அல்லது செதுக்கிய உருவம் சுலவுதல் = வளைதல், துண்டு. [சுல்> சில்> சிலை] சிவப்பு: செந்நிறம் செம்மை = சிவப்பு செம்> செவ்> சிவ் சிவ சிவப்பு] சிவன்: சிவனியார்க்கு வழங்கும் சிறப்புப் பெயர் சிவம் = சிவநெறியாராற் செந்நிறத்தான் எனக் கருதப்படும் இறைவன் அல்லது கடவுள். செம்மை = சிவன் செம்> செவ்> சிவ்>சிவ > சிவம் > சிவன்] சிவை: மலைமகள் (சிவம் (ஆ.பா.)> சிவை (பெயா)] சிவன் தேவியாக உருவாக்கப்பட்ட திருவருள் சிற-த்தல்: 1. மேம்படுதல், 2. மிகுதல். சீர்த்தல் = சிறத்தல் [சீர்> சிற-த்தல்] சிறகு: பறவை, வெளவால், பூச்சி முதலியன பறப்பதற்கு ஏதுவாக அமையும் உறுப்பு. [ இறகு> சிறகு] சிறப்பு : 1. மேம்பாடு, 2.உயர்வு. சீர்> சிற> சிறப்பு) சிறுமை: 1. குறைபாடு, 2. வறுமை, 3. துன்பம். [சிறு> சிறுமை] சிறை : 1. காவல், 2. காவலில் அடைக்கை, 3. சிறைச்சாலை. 93