பக்கம்:வேர்ச்சொல் சுவடி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வேர்ச்சொல் சுவடி [சீ> சீர்.] சீர்மை: 1. சிறப்பு, 2.புகழ் [சீர்> சீர்மை] சீரை : 1. மரவுரி, 2. மரப்பட்டை சிரைத்தல் = மேலுள்ளதை நீக்கல் சிராய் சிரை சீரை] சீலை : 1. துணி, 2. புடைவை. [ சீரை சீலை] சீவல்: சீவப்பட்ட துறுவல் சீத்தல் = கீறிக்கிளறுதல், கூர்மையாகச்சீவுதல் [ சீத்தல்> சீய்த்தல்> சீவுதல்> சீவல்] சீவு-தல் : 1. ஒரே வீச்சில் வெட்டுதல், 2. துண்டுதுண்டாக்குதல். சீத்தல் = கூர்மையாகச் சீவுதல் சீத்தல்>சீய்த்தல் சீவு-தல்.] சுக்கு: உலர்ந்த இஞ்சி சுள் = சுடுதற் கருத்துவேர் சுட்கு = வரண்டது [சுள்>சுள்கு>சுட்கு சுக்கு சுங்கான் : புகை பிடிக்கும் குழாய் சுருங்கை = சிறுவழி [ சுருங்கை > சுங்கை சுங்கான்.] சுட்டு-தல்: குறிப்பிடுதல் [கள் > சுட்டு-தல்] சுடர்: 1. ஒளி, 2. வெளிச்சம், 3. ஞாயிறு, 4.வெயில். [கள் > சுடு> சுடர்] 95