பக்கம்:வேலின் வெற்றி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

售2 - வேலின் வெற்றி அந் நிலையில் சுருக்கென்று சண்டன் எழுந்து “அரசே! என்னை அனுப்பினால் மும்மூர்த்திகள் தடுத்தாலும் முனைந்து தாக்கி முருகனையும், அவன் படையையும் வென்று வருவேன். என்றான். . . - இந்த விதமாக மற்றைய அமைச்சரும், தந்திரத் தலைவரும், _தானைத்தலைவரும் பேசக் கண்ட பானுகோபன், எழுந்து, "என் ஐயனே முனிவரும் மயங்குமாறு பேசுதல் மாயை செய்த மலையையும், தாரக வீரனையும் முருகன் கொன்றபோது என்னை அனுப்பினாயல்லை; இன்று இதைக் குறித்து வினவுவது என்னோ? ஆயிரத்தெட்டு அண்டங் களுக்கும் அரசனாயுள்ள நீ, சிவன் பெற்ற சிறுவன்மீது சீறி யெழுதல் சரியன்று என்னை அனுப்பி வெற்றி பெற்று வாழ்க’ என்றுரைத்தான். அப்போது இரணியன் என்னும் மைந்தன் தளராத . வலிமையுடைய சூரனை நோக்கி, "இன்று இரவே Dಣಣ್ಣ புக நான் சென்று பெரும்போர் பரிர் எண்னை அனுபபுக; நான று பெருமபோா புரிந்து பகைவரைக் கொன்று வானவரையெல்லாம் ஒறுத்து. வருகின்றேன்" என்றான். - அவனுக்குப் பின் அவன் தம்பியாகிய அங்கிமுகன் எழுந்து, "வெம்போர் புரிந்த என் தம்பியை வாளால் முடித்த தூதனையும், மற்றைய பகைவரையும் கொன்றாலன்றி இம் மாநகர்க்கு நான் வருவதில்லை" என்று வஞ்சினம் கூறினான். அங்கிமுகன் இவ்வாறு சொல்ல, அவனை விலக்கி _. ஆயிரந்தலை பெற்ற சிங்கமுகன், மன்னர் * மன்னனாகிய சூரனை நோக்கி, ‘அரசே இதுகாறும் பேசுதல் இ) மந்திரத் தலைவரும், படைத்தலைவரும், மைந்தரும் அவரவரிடம் அமைந்த வீரம் பேசினரேயன்றி, பெருமை சான்ற உனக்கு ஏற்ற அறிவுரை கூறினாரல்லர். நான் கூறுகின்றேன், கேள்: வானவரைக் கடலிற்சென்று மீன் பிடித்துவரக் கட்டளை யிட்டாய் அது நன்றாகுமா? இத்தகைய செய்கையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/120&oldid=919656" இலிருந்து மீள்விக்கப்பட்டது