பக்கம்:வேலின் வெற்றி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 113 தம்முயிரில் ஆசையற்றவர் செய்வரேயன்றி மற்றையோர் செய்வரோ? வானுலக மன்னனாய இந்திரனை வருந்த வைத்தாய்! அவன் அரசுரிமையைப் பறித்தாய்; அவன் இருந்த நகரின் செல்வ மெல்லாம் கவர்ந்தாய் வானவரைச் சிறையில் வைத்தாய். அந் நாளிற் சிறை புகுந்த வானவரை இந் நாளளவும் விட்டாயில்லை; இரக்கம் துறந்தாய்! அதனாலன்றோ அறுமுகன் உன்னுடன் போர் செய்ய வந்தான்? ஈசனார் நமக்குத் தந்த வரத்தின் தன்மையை எண்ணிப்பார். எத் திறத்தவரும் உம்மை வெல்லமாட்டார். நமது சத்தி யொன்றே வென்றிடும் என்றார், ஈசன். அவ் வரத்தின் திறத்தினாலன்றோ தாரகன் உயிரை முருகன் விடுத்த வடிவேல் கவர்ந்தது? எம் ஐயனே! தேவரைச் சிறையி னின்றும் விடுவாயாயின் முருகவேள் இங்குப் போர் செய்யக் கருதார்; நாம் செய்த குற்றமும், மனத்திற் கொள்ளார்; நாளையே கயிலை மலைக்குக் கடிது செல்வார்" என்று பேசினான். மற்றையோர் பேசியதற்கு மாறாகச் சிங்கமுகன் சொல்லிய சூரன, மொழிகளைக் கேட்ட போது கொடிய சூரன் கை e .. யொடு கையறைந்தான் பற்களால் இதழைக் கடித் , তা ు வெதும்பினான். முடித்தலை அசைத் இ, தான். "எல்லையற்ற காலமாக யான் வாணவரைச் மறுததல் சிறை செய்யக் கண்டும், திருமால் பிரமன் முதலி யோர் எனக்கு அஞ்சியே செயலற்றிருந்தனர். அன்னவர் நிற்க ஒரு பாலனா அழிவற்ற என்னுயிரைக் கவர வல்லவன்? விண்ணில் உள்ள கதிரவனை ஒரு கனியென்று கண்ணிலாதவன் காட்ட, அதைக் கையிலாதவன் போய்ப் பிடிக்கும் தன்மை போன்றது, கருத்திலாச் சிறுவ்ன் ஒருவன் என்னை வெல்வான் எனச் சொல்வது" என்றான். - இவ்வாறாகச் சூரன் சொல்லிய மொழிகளைக் கேட்ட சிங்க மீண்டும் முகன், "ஐயனே! இன்னும் ஒன்றுரைப்பேன்; சிங்கமுகன் தன் கோபும் கொள்ளாமல் கேட்க പേങ്ങ@l. & த்தல் ஆகும் ഗ്രങ്ങഖങ്ങി. ിങ്ങളഖജുങ്ങ_ധ கருதது நெற்றிக் கண்களில் எழுந்த ஆறு சுடர்களே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/121&oldid=919658" இலிருந்து மீள்விக்கப்பட்டது