பக்கம்:வேலின் வெற்றி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 147 மன்றத்திலே மறந்தவனைப்போல், மானமுற்று நின்றான்; அப் போது முருகப் பெருமான்ை நோக்கி, "பாலனே! வேல் எறியவும், வில் வளைக்கவுந்தான் பயின்றாயோ?” என்று ஏளனம் பேசி ஒரு தண்டாயுதத்தை வீசியெறிந்தான். சிங்கன் பேசிய பேச்சையும் விடுத்த படையையும் சற்றே கருதினார், முருகன். அவ் வஞ்சகன் உயிரைக் கவர்ந்து வருமாறு தம் வச்சிரப்படையை விடுத்தார். அப் படை விரைந்து எழுந்தது; எதிரே வந்த தண்டப்படையை ஒடித்துப் பொடித்தது; மலையின் மேற் பாயும் இடிபோல், சிங்கன் மார்பைத் தாக்கிப் பிளந்தது; அவனுயிரையும் போக்கிற்று, கங்கையாற்றிலே சென்று கறை போகப் படிந்து நீராடிற்று கற்பகச் சோலையிற் பொருந்திய மணத் திலே தோய்ந்தது; தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாகிய கந்தப் பெருமான் கையில் வந்து சிறப்புடன் அமர்ந்தது. சிங்கமுகன் இறந்த செய்தியை அறிந்த சூரன் கரிய மேகம்போல் தரையிட்ை வீழ்ந்தின் புரண்பன் கையொடு கை யடித்தான்; மயங்கினான். பண்டை வண்மையும் வீரமும் மேன்மையும் இழந்து, பொங்கிய துயர்க்கடலில் மூழ்கிப் புலம்பினான். "ஐயோ! தம்பி உலகத்தில் போர் மூண்டதென்றால் உள்ளம் களிப்பாயே! உன்னுயிரையும் கொண்டானோ கூற்றுவன்? நீ இறந்தாய் என்று அறிந்தால் மாய வனும் பிரமனும் இந்திரனும் முன்னைப் பெருமையை அடைவரோ அந்தோ! பொன்னைப் பெறலாம்; பூமியைப் பெற லாம்; மாதரைப் பெறலாம். அருமைத் தம்பி! இப் பிறப்பில் இனி உன்னைப் பெறுவேனோ? அப்பா என் உயிர் நீயே, உணர்ச்சி யும் நீயே, சுற்றமும் நீயே; பெற்ற தந்தையும் நீயே, தம்பியும் நீயே, தவமும் நீயே என்று நினைத்திருந்தேனே! நீ சற்றும் கருதாமல் என்னைக் கைவிட்டாயே! தனித்திருக்கக் கற்றாயே!” என்று.சூரன் அழுது அரற்றிய பேரோசை அவன் ஆண்ட அண்டமெங்கும் செவிடுபட அதிர்ந்தது. அவ்வோசை கேட்டு மாலும், பிரமனும், இந்திரனும் மனமகிழ்ந்து ஆரவாரித்தனர். , - . . . . . . . ; சூரன் சோகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/155&oldid=919731" இலிருந்து மீள்விக்கப்பட்டது