பக்கம்:வேலின் வெற்றி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்போது சூரன் கோடி கோடியாக வேற்படை தாங்கி நின், . ஒற்றரை நோக்கி, "என் ஆட்சியில் உள்ள அண்டங் ಿ # ೧ಕ್ಖ ಆಟಿಕೆ ಕುಣಿà೧ärgig '_சேனைகளை யெல்லாம் அழைத்து வருக" என்றான். திறமுரை P வந்த அசுரர் வரத்திற் பெரியர் மாயத் திறத்திற் பெரியர்; உரத்திற் பெரியர் ஊக்கத்திற் @ມກົມ; சிரத்திற் பெரியர், சீற்றத்திற் பெரியர் கரத்திற் பெரியர் காலனிற் கொடியர். இது தகைய சேனைகளைக் கண்டதும் இந்திரனும் வானவரும் அஞ்சி நடுங்கிக் கவலை கொண்டார்கள். இந்திரன் துளபமாலை யணிந்த திருமாலை நோக்கி, "முதல்வனே! வன்மையும் கொடுமையும் வாய்ந்த அசுரராகிய இருள் நீங்கி ஒளி வருவதில்லையோ, வானவர் கடுஞ்சிறையினின்றும் விடுபடுமாறில்லையோ? பெருஞ் செல்வத்தை இழந்த நமது துன்பம் தொலையுமா றில்லையோ, திருவாய் மலர்ந்தருள்க’ என்று வேண்டினன். அப்போது திருமால், வானவர். வேந்தனாகிய இந்திரனது வருத்தத்தை அறிந்து பேசலுற்றான். "வானவர் வேந்தே கேள்: காலமாகவும் காலம் கடந்தவனாகவும் கருமமாகவும் கருமம் அற்றவனாகவும், உருவமாகவும் உருவமற்றவனாகவும், குணங் களாகவும் குணங்கள் அற்றவனாகவும், உலகமாகவும் உலக மல்லாதவனாகவும் உள்ள ஆதியற்ற மூலப் பொருளாய வள்ளலே ஆறுமுகங்கொண்டு அருள் புரிய வந்தார். அவரே பிரமனாக நின்று உலகத்தைப் படைப்பார்; என் வடிவத்தில் அமைந்து காப் பார்; சங்கரன் வடிவத்தில் தோன்றி அழிப்பார்; மின்னுருப்போல வெளிப்படுவார். அவர்தம் திருவுருவத்தை விரித்துரைத்தல் மறை களுக்கும் அரிது; சூரன் முதலிய அசுரரை அழிக்க நினைத்தால், ஒரு சிரிப்பால் ஒழிப்பார் சீற்றத்தால் ஒழிப்பார் திருக்கண் நோக்கால் ஒழிப்பார் என்றால் தமக்குவமை யில்லாத் தலைவராய முருகவேளின் தன்மையை யாவரே மொழிய வல்லார்? பச்சிளம் பாலன் போலத் தோன்றும் முருகவேள் அசுரரையெல்லாம் வேலால் விரைவில் அறுத்து ஒழிப்பார். அப் படையால் சூரனையும் வெல்வார்; இதில் ஐயம் இறையளவுமில்லை" என்று அருளினன், திருமால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/156&oldid=919733" இலிருந்து மீள்விக்கப்பட்டது