பக்கம்:வேலின் வெற்றி.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை | 49 பெருஞ்சேைனயோடு சூரன் போர்க்களம் புகுந்ததை அறிந்து முருகவேள் முறுவல் செய்தார், போர்க்கோலம் சூசனும் * -- * - - - - - - - យ៉ கொண்டு எழுந்தார். விண்ணும் மண்ணும் .. ఆల్రత్తి நெருங்கி நின்ற அசுர சேனை ஆரவாரம் செய்து போர் செய்தல் شه ۹ گاه شام محمد سی ۹ گی ~_ - - போர் தொடங்கிற்று. அன்னார் செய்த கடும் போருக்கு ஆற்றாது முன்னணியில் நின்ற பூதப் பட்ை பின்னிட்டது; அசுரப் படையின் செயல் கண்டு நெற்றிக் கண் னுடைய தந்தையைப்போல் சற்றே சிரித்தார், முருகன்; திருக் கரத்திலே வில்லெடுத்து வளைத்தார். தேவரும் அவ் வோசை கேட்டு நடுங்கினர். மன்னுயிர் எல்லாம் மனம் பதைத்தது. ஆறுமுகமும், பன்னிரு கையும், அரும் படைக்கலமும் நிகரற்ற வீரமும், ஆண்மையும் போர்க்களத்தில் நிலவக் கண்ட சூரன், முன்னாளில் இருந்த தக்கனைப்போல் ஆணவம் கொண்டு பேசலுற்றான். "பாலன்ே என் பெரும் சேனையைச் சிதைத்தாய்; இனிச் சிறுவன் என்று உன்னை விடப்போவதில்லை; போரில் புறங்காட்டிப் போனாலும் உன்னை அழிப்பேன்; வானவர் குழுவை யும் கணங்களையும் ஒழிப்பேன்" என்று சொல்லி, மாயையில் வல்ல இந்திர ஞாலம் என்னும் இணையில்லாத் தேர்மேல் நின்று, எண்ணிறந்த உருவம் கொண்டு, சரமாரி பொழிந்தான். முருகவேள் அதனைக் கண்டு "நன்று நன்று" என்று நகைத் தார் ஞானாஸ்திரத்தை எடுத்து விடுத்தார். அப் படை சென்று சூரன் மாயத்தை முற்றும் அறுத்தது. மாய வடிவம் மறைந்த நிலையில் வலிமை யிழந்து, மனம் தளர்ந்த சூரன் தனியனாய்த் தேர்மேல் நின்றான். அந் நிலை கண்ட் தேவர் ஆரவாரித்து அறுமுகப் பெருமானைப் போற்றி நறுமலர் தூவினர். அப் போது சூரன் தேரோடு மறைந்தான் அண்ட கூடத்தின் வாயிலை அடைந்து அறைகூவினான்; அப்பால் அமைந்த அண்டத்திற் புகுந்தான். அது கண்ட முருகவேள் அங்கும் அவனைத் தொடர்ந்து சென்றார். சூரன் அண்டங்கள்தோறும் மின்னல் போற் பாய்ந்தான்; கடும் போர் புரிந்தான் இளைத்த வேளையிற் கரந்து சென்றான். ஆயினும் அவனை விடாது தொடர்ந்தார், அறுமுகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/157&oldid=919735" இலிருந்து மீள்விக்கப்பட்டது