பக்கம்:வேலின் வெற்றி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 வேலின் வெற்றி பெருமான். அண்டம் எங்கும் சுற்றிய அசுரர் கோமான் மீண்டும் மகேந்திர நகரம் போந்தான். நிழல் போல் அவனை விடாது தொடர்ந்த கந்தவேளும் விரைந்து அவ்விடம் சென்றார் சூரனையும் அவனைத் தொடர்ந்து வந்த வேலனையும் கண்ட் அசுரசேனை பொங்கி எழுந்து அறுமுகனைச் சுற்றி ஆரவாரித்தது. அதைக் கண்டு சற்றே சிரித்தார், முருகப் பெருமான். முன்னாள் ஈசனது சிறு நகையால் எரிந்த திரிபுரம் போல், அசுர சேன்ை நீறுபட்டு அழிந்தது. தந்தையைப் பின்பற்றுதல் மைந்தர்க்குத் அது கண்ட சூரன், "என் தம்பியரும், மைந்தரும், அமைச . சரும் ஏனைய படைத்தலைவர்களும் முன்னமே மாயையின் அளவிறந்த சேனையையும் இன்று 3. குமரன் கொன்றான். யான் தன்னந் தனியனாய் நின றேன். இனி, செயற்பாலது யாது?" என்று கருதிப் பெருமூச் செறிந்தான். அன்னையாகிய மாயையை மனத்தில் நினைத்தான். உடனே அவள் வந்து தோன்றினாள். "வீர மைந்தா இங்குத் தனியனாய் நிற்கின்றாய்! தளர்ந்து தோன்றுகின்றாய்! என்னை நினைத்தாயே! உன் கருத்து என்ன? சொல்லுக" என்றாள். அப்போது சூரன் மாயையை நோக்கி, "தாயே! இதுவரை நிகழ்ந்த போரில் என் வீரத் தம்பியர் விழுந்தார். மைந்தர் மாண் டார்; அமைச்சரும் அழிந்தார். யான் ஒருவனே எஞ்சி நிற்கின்றேன். இறந்தவர் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுதல் வேண்டும். அதற்கு ஓர் உபாயம் கூறுக" என்று வேண்டினான். r.-- மாயை அது கேட்டு நகைத்து, "அப்பா சூரனே! பன்னிரு கரங்களோடு விளங்கும் பரமனைப் பாலன் என்று நினையாதே; அவன் வேற்படையால் நீ விரைவில் விழுந்திடுவாய். மாதா வுரையை நீ மனத்திற் கொள்வாயா? தலை விதியைத் தவிர்க்க யாரால் இயலும்? அது நிற்க, உன் மனம் மகிழும் வண்ணம் இறந்தவர் உயிர் பெற்று எழ வேண்டுமாயின், புறக் கடலின் மருங்கே மங்கல மலையொன்று உண்டு. அமுத சீத மந்தர கூடம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/158&oldid=919737" இலிருந்து மீள்விக்கப்பட்டது