பக்கம்:வேலின் வெற்றி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 15? என்பது அதன் பெயர். அக் குன்றத்தை இங்கே வரவழைத்து நினைத்த செய்கையை நிறைவேற்றிக்கொள்க' என்று சொல்லிச் சென்றாள். அம் மொழி கேட்ட சூரன், "தாய் சொல்லிய சூழ்ச்சியே தக்கது. இறந்தோரை எழுப்பும் வழி இதுவே" என்று மனமகிழ்ந்து, இந்திரஞாலம் என்னும் தேரை நோக்கி, "நீ மனோ வேகமாகச் சென்று, புறக்கடலின் அருகேயுள்ள அமுத மந்தர மலையைப் பெயர்த்துக்கொண்டு வா" என்றான். உடனே இந்திர ஞாலம் எழுந்தது; ஏழு கடலையும் கடந்தது; புறக்கடலிற் போந்தது; அமுத மந்தர மலையை எடுத்தது; சென்ற வழியே மகேந்திர நகரத்திற்கு விரைந்து வந்தது. அம் மலைக்காற்று அமர்க்களத்தில் வீசிற்று. அன்றுவரை போர் புரிந்து இறந்த வீரர் எல்லோரும் ஒருங்கே உயிர் பெற்று எழுந்தார்கள். சிங்கமுகன் எழுந்தான்; பானுகோபன் எழுந்தான், இளைய வச்சிரவாகு எழுந்தான்; எரிமுகன் எழுந்தான்; தருமகோபனும் இருபுதல்வரும் எழுந்தனர். மக்கள் மூவாயிரவரும் எழுந்தனர். இவற்றைக் கண்டார், முருகவேள். "சூரன் செய்த சூழ்ச்சியும், முருகவேள் மாயை சொல்லிக் கொடுத்த வழியும் மந்தர சங்காரப் மலையின் மகிமையும், பகைவர் பிழைத்து எழுந்த ஆ_ வகையும் நன்று நன்று" என்று நகைத்தார். விடுதல் அப்போது அசுரப் பெரும்படை வேகமாக வந்து அறுமுகப் பெருமானை வளைத்தது. அவற்றைத் தொலைக்கக் கருதிய பெருமான் மன்னுயிரையெல்லாம் அழிக்க வல்ல சர்வ சங்காரப் படையை எடுத்தார்; மனத்தினாற் பூசனை புரிந்து அப் படைக் கலத்தை நோக்கி, "போர் முனையில் நிற்கும் அரிமுகன் முதலிய அசுரத் தலைவரையும், அளவிறந்த சேனையையும் அழித்திடுக" என்று கூறி விடுத்தார். சங்காரப்படை புறப்பட்டது. குர்ன் சேனையை முற்றும் சூறையாடிற்று; இந்திரஞாலத் தேரின் மீதிருந்த மந்தர மலையை நொறுக்கி எறிந்தது; கந்தவேள் கையில் மீண்டும் வந்தடைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/159&oldid=919739" இலிருந்து மீள்விக்கப்பட்டது