பக்கம்:வேலின் வெற்றி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#52 வேலின் வெற்றி அரிமுகனும், பானுகோபனும், எரிமுகனும், வச்சிரவாகுவும் நூற்றிருவரும், மூவாயிரவரும், தருமகோபனும், பெருஞ் சேனையும் பிறரும் மந்தர மலையோடு மடிந்து விழுந்தார்கள். சிவப் படையின் செய்கையைக் கண்டான், சூரன் மனம் தளர்த் தான் வன்மை இழந்தான்; வாட்டம் உற்றான். பெருமூச் செறிந்தான் முன்னைப்போல் தன்னந் தனியனாய் நின்றான். அந் நிலையில் அவன் உள்ளத்திற் கடுஞ்சினம் மூண்டது. என் சேனையெல்லாம் சிதைத்த சிறுவனை త్రి என்னைப்போல் தனிமை செய்து பின் வெல்வேன் தேரும் த - - , “o gē "కే துணிந்து இந்திரஞாலத்தை நோக்கி, "நம்மைப் - . பகைத்த ற்கம் கணங்களையும் விற்படை கனையும் த்து நிற்கும் பூத றபன தாங்கிய வீரரையும் கவர்ந்து சென்று அண்டி முகட்டிற் கொண்டு சேர்த்துக் காவல் செய்திடுக” எனச் சூரன் பணித்தான். அவ் வண்ணமே அத் தேர் கடல்போற் பரந்து நின்ற சேனையின் அறிவை மயக்கிக் கவர்ந்து சென்று, அசுரர்கோன் பணித்தவாறே அண்டத்தின் முகட்டிற் கொண்டு சேர்த்துக் காவல் செய்து நின்றது. - சேனையை இழந்து தனியராக நின்றார், முருகப் பெருமான். அது கண்டு மகிழ்ந்தான், அசுரர் கோமான்; தன் தேரின் திறங் கண்டு முக மலர்ந்தான். வானவர் மீண்டும் துன்புற்று மயங்கினர். மாற்றான் நிலையும், தம் நிலையும் கண்டார், முருகவேள், சீற்றம் கொண்டார்; வில்லை வளைத்தார், திண்மை வாய்ந்த அம்பினை நோக்கி, "நமது சேனையைக் கவர்ந்து அண்டமுகட்டிற் கொண்டு சேர்த்த வலிய தேரை விரைவிற் கொண்டுவருக” என்று கூறி விடுத்தார். ஒப்பற்ற அம்பு, வேல் போல் ஒளி வீசிச் சென்றது. ஏழுலகங்களையும் கடந்தது; ஏனைய பதங்களையும் நொடிப் பொழுதில் விட்டகன்று அண்ட முகட்டை நாடிச் சென்றது. அங்குப் பெருஞ்சேனையைத் தன்னகத்தே கொண்டு நின்ற தனிப் பெருந் தேரைக் கண்டது; அதன் வலிமையை முரித்தது: சேனையோடு தேரையும் பற்றிக் கொணர்ந்து வெற்றி வேலன் முன்னே விட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/160&oldid=919743" இலிருந்து மீள்விக்கப்பட்டது