பக்கம்:வேலின் வெற்றி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 153 வானவர் போற்றி ஆரவாரம் செய்தனர். வீரவாகுவும் பிறரும் தேரினின்று ஊக்கத்தோடு இறங்கினர். அப்போது முருகவேள் இந்திரஞாலத்தை நோக்கி, "அழகிய நெடுந் தேரே! இனி நீ அச் சூரனிடம் செல்லாதே; அவன் இறத்தல் திண்ணம்; இங்கேயே நில் என ஆணையிட்டார். அண்டத்தை யடைந்த தேர் அறுமுகன் ஏவிய கணையால் மீண்டு வந்ததைக் கண்டான், சூரன், பூதப் படைகள் எல்லாம் மீண்டும் போர்க்களம் போந்த்தும் அறிந்தான். தனது தேர் தன்னிடம் வராததையும் தெரிந்தான். கடுங்கோபம் கொண்டான். மாயையின் திறத்தால் சூரன் கொடியதொரு பறவையின் உரு காட் வம் தொண்டான் பெருங்கடல் Gurు முழங்கினான். அப சிறகு பெற்ற மலைபோல் எழுந்து, பூதர்களை அறைத் பறவையும் * * * : * - - - இ... தான்; கூரிய மூக்காற் குத்தி விழுங்கினான்; அறுமுகப் అత్తాతా : ன் ஏறியிருந் - - - - - - - ു --♔ |് ருந்த தேரையும் சுற்றிச் சுற்றி வந்து அடித்தான்; பரந்த கடல்களின் எல்லையளவும் பறந்து சென்றான்; மீண்டு வந்தான்; நிலவுலகம் முழுவதும் சென்று மீண்டான், நாகலோகமும் சென்று வந்து பூதங்களைப் புடைத் தான்; எங்கும் சுழன்று திரிந்தான். இவ்வாறு பறவை வடிவம் பூண்டு போர் புரிந்த சூரனைக் கண்டார், முருகவேள், பறவையைத் தேர்மீது இருந்து போர் செய்து கொல்லுதல் பழியாகும் என நினைத்தார்; இந்திரனை நோக்கினார். கந்தப் பெருமான் கருத்தினையும், தன்பால் அவர் கொண்ட கருணையையும் அறிந்த இந்திரன் அழகிய தோகையையுடைய மயிலாக மாறி வந்தான்; மரகதக் குன்றுபோல் வேலனைப் போற்றி நின்றான்; "ஐயனே! வானவர் எல்லாம் வணங்கி நிற்க எளியனாகிய என்மீது கருணை வைத்தாய்; ஆதலால் புன்மை தீர்ந்தேன்; நன்மையுற்றேன்; பிறப்பெனும் பேதைமையும் போக்கினேன்" என்று இந்திரன் கூறியபொழுது முருகப் பெருமான் தேரினின்றும் இறங்கித் தோகை மயில்மேல் ஏறினார், சூரனைத் தொடர்ந்து சென்றார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/161&oldid=919745" இலிருந்து மீள்விக்கப்பட்டது