பக்கம்:வேலின் வெற்றி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து வந்து தொல்லை விளைவித்த முருகன் செயல் கண்டு சூரன் மனந்தளர்ந்தான்; துயரடைந்தான் சீற்றம் கொன் டான்; அவர் கையில் இருந்த வில்லைக் கடித்து முரிக்கக் கருதி வந்தான். அது கண்ட முருகவேள் மற்றொரு கையில் அமைந்த வாட்படையை வீசிப் பறவையின் உடலை இரு கூறாக வெட்டி னார். அரி, அயன் முதலிய தேவர்கள் ஆனந்தமுற்று ஆடினர். அப்பொழுதும் சூரன் அழிந்தானல்லன். மாய வடிவங்கள் பல் எடுத்தான். பேய்போல் வருவான் புகையும் தீப் போல் தோன்று சூரன் வான்; சுழல் காற்றெனத் திரிவான், கடலெனப் பரந்து ; நிற்பான். அம் மாயா வடிவங்களை நோக்கி, மாயையும் roنص ، حر w ռ: • * ് ുഖങ് ஆயிரங் ಹ ಅರುಣಿ @త్ల அவற்றை நோக்கி, "அம்பாகிய ತಿ೦ಡಿಗೆ நீர் சென்று சூரன் எடுத்துள்ள மாய வடிவங்களை அடியோடு கெடுத்து வருக" என்று விடுத்தார். அவ் வம்புகள் விரைந்து சென்றன; வேகமும் கோபமும் கொண்டன; சூரன் எடுத்த ஓர் உருவத்திற்கு ஏழுருவம் எடுத்தன; எட்டுத் திசையிலும், விண்ணிலும் மண்ணிலும் செறிந்தன; அவன் மாயங்களை யெல்லாம் அழித்தன. மாறுபட்ட சூரன், ஒருவனாய் அப் போர்க் களத்தில் நின்றான். அவன் மாயத்தை ஒழித்த அம்புகள் மீண்டும் சென்று முருகவேள் தூணியிற் புகுந்தன. அந் நிலையில், பெருமான் சூரனை நோக்கி, "கருமேகத்தின் இடையே தோன்றி மறையும் மின்னலைப் போல எம் - . கண்ணெதிரே எண்ணரிய உருவம் கொண்டாய் கநத - • , a - A-ra w : காட்சி அவற்றையெல்லாம் அறிந்தோம். இனி நமது வடி , வத்தை நீ காண்பாயாக" என்று திருவாய் மலர்ந்து, தருதல் கடலும் கடல் சூழ்ந்த உலகமும், புவனமும், அண்ட மும், வானமும் பிறவும் தமது திருமேனியில் அமைந்தனவேயன்றி வேறில்லை என்னும்படி சிறந்ததோர் உருவம் கொண்டார். அனந்தகோடி சூரியர்கள் ஒருங்கே உதித்தாற்போன்று அவிர் ஒளி வீசிநின்ற அழகிய திருவுருவை நோக்கிய தேவரும் திடுக்கிட்டார். அவர்க்கு அபயம் அளித்தார், ஆறுமுக வள்ளல். --------

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/162&oldid=919747" இலிருந்து மீள்விக்கப்பட்டது