பக்கம்:வேலின் வெற்றி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 வேலின் வெற்றி அப்பொழுது, திருமால் முதலிய தேவர்கள், கார்த்திகைப் பெண்களை அழைத்து, "சொல்லுதற்கரிய பெருமை வாய்ந்த சரவணப் பொய்கையில் சண்முகப்பெருமான் ஒரு குழந்தை போலத் தோன்றுகின்றார். நீங்கள். அறுவரும் பாலமுதம் ஊட்டி அவரை வளர்ப்பீராக” என்றனர். அதற்கு இசைந்து அவர்களும் சரவணப் பொய்கையிற் சென்று சேர்ந்தார்கள், குமாரக் கடவுளைத் துதித்து நின்றார்கள். தம்மை அடைந்தவர்க்கு வேண்டிய எல்லாம் தருபவர் ஆதலாலே, அப் பெருமான், முன்பிருந்த வடிவத்தை விட்டு வெவ்வேறாக ஆறு குழந்தை வடிவம் கொண்டருளினார். ஓர் உருவம் மெல்லத் தவழ, ஒர் உருவம் தளர்ந்து நடக்க, ஓர் உருவம் எழுந்து நிற்கமாட்டாமல் விழ, ஓர் உருவம் இருப்பிலே இருக்க, ஓர் உருவம் பொய்கையைக் கலக்கிச் சுற்ற, ஓர் உருவம் தாயிடத்திருக்க. இத்தனை திருவிளையாடலையும் குமரன் ஒருவனே செய்யலுற்றார். ஈசன் கண்ணினின்றும் எழுந்த பொறிகளின் வெப்பத்தைப் ... பொறுக்கலாற்றாது உமையம்மை விரைந்தோடிய நவசக்திகள் போது, அவள் பாதச் சிலம்பினின்றும் நவமணிகள் சிதறின. அவ்வாறு சிந்திய மணிகளில், ஈசன், உமையவள் திருவுருவைக் கண்டு வருக என்று திருவாய் மலர்ந்தவுடனே, நவமணி உருக்களும் நவசக்திக ளாயினர். அந் நவ மாதரும் கருவுற்று, உமையம்மையின் அருளைப் பெற்று, விடை கொண்டு, வீர மைந்தரை ஈன்றனர். மாணிக்கவல்லி வீரவாகுவையும், மற்றைய வல்லிகள் முறையே எட்டு வீரரையும் பெற்றெடுத் தார்கள். இங்ங்னம் தோன்றிய அருந்திறல் வீரர்கள் மாதொரு பாகனது மலரடி பணிந்து எழுந்தார்கள். அப்போது ஈசன் பார்வதியைப் பரிவுடன் நோக்கி, "இவர் மதியுடையார்; வலியுடையார், மானமுடையார்; இன்னோர் நம் மைந்தர்; புதியரல்லர், நந்தி கணத்தைச் சேர்ந்தவர்” என்று நவின்றார். இது நிற்க. துன்பமுற்ற பிரமன் முதலிய தேவர்கள் இன்பமுறும் வண்ணம், "நம் கண்ணிலே தோன்றிக்ககங்கைப் பொய்கையிலே வளரும் நின் புதல்வனை இம்மல்ைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/34&oldid=919822" இலிருந்து மீள்விக்கப்பட்டது