பக்கம்:வேலின் வெற்றி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 27 முருகனைக் அழைத்து வருவோம், வருக" என உமையிடம் இலாத்திற்கு உரைத்தார் ஈசன், அம்மையும் அதற்கிசைய, எடுத்து வருதல் இருவரும் திருக்கோயிலினின்றும் புறப்பட்டு, - கயிலையை விட்டு, மேரு மலையினும் நெடிய இமயமலைப் பக்கம் போந்து, அன்னங்கள் விளையாடும் சரவணப் பொய்கையை வந்தடைந்தார்கள் அங்கு அறுவகை உருவு கொண்டு அமர்ந்த குமரன் தன்மை கண்டு, கருணைகூர்ந்து, பொய்கையின் கரையிலே நின்றார்கள். தாமரை பூத்த தடாகத்தில் ஆறு வேறுருவம் கொண்டு வீற்றிருந்த அரும்பெருங் குமரனும், அண்டர் நாயகனோடு அகில மீன்ற அன்னையைக் கண்டு முக மலர்ந்து மனமகிழ்ந்தார். அந் நிலையில் உமையம்மை சரவணப் பொய்கையில் இறங்கித் தன் மைந்தனுடைய ஆறு உருவங்களையும், அன்புடன் அணைத்தெடுத்து, ஆறு முகங்களும் பன்னிரு தோள்களும் உடைய ஒரு திருவுருவமாகச் செய்தருளினாள். உயிர்கள் எல்லாம் ஒடுங்கும் ஊழிக் காலத்தில் எம்பெருமானுடைய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேரும் தன்மைபோல், அந்தமற்ற ஆறு உருவமும் ஒன்றாகவே, கந்தன் என்று பேர் பெற்றார், குமரன். அப் பொய்கையில் தொழுது நின்ற கார்த்திகைப் பெண்களை நோக்கி, ஈசன், "நீங்கள் கந்தனை எடுத்து வளர்த்த முறைமையால் இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயர் பெற்றுக் கார்த்திகேயன் ஆகுக. உங்களுக்கு உரிய நாளாகிய கார்த்திகையில் கந்தனது திரு வடியை வழிபடுவோரது குறை தீர்த்து அவர்க்குப் பரகதியும் தருவோம்" எனப் புகர்ந்தார். : பொது விடங்களிலும், தாமரைக் குளங்களிலும், மெல்லிய தென்றல் தவழும் சோலைகளிலும், வற்றாத நீருடைய ஆறுகளிலும் குன்றுகளிலும் குமாரவேள் திரு|-ல் உலவுவார் ஆறு முகங்களோடு குழந்தையாக வருவார்; ஒரு முகத்தோடு காட்சி தருவார்; வாலிபனாய் வருவர்; வேதியர் போலவும் முனிவர் போலவும் தோன்றுவார்; அம்பு தொடுக்கும் வீரரைப் போல எங்கும் திரிவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/35&oldid=919824" இலிருந்து மீள்விக்கப்பட்டது