பக்கம்:வேலின் வெற்றி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வேலின் வெற்றி கந்தன் செய்த திருவிளையாடலைக் கண்டு சிந்தை மகிழ்ந்த . உமையம்மையிடம் ஈசன் அவர் சிறப்பின்ை முருகவேளின் உணர்த்தலுற்றார். "மாதே! நமது கண்ணில் பெருமையைக் தோன்றிய குமரனைக் கங்கை தாங்கிச் சென்று ఇpgు சரவணத்திற் சேர்த்தமையால், அவன் காங் கேயன் என்ற பெயரைப் பெற்றான்; அழகிய சரவணப் பொய்கை யில் குழந்தையாக வளர்ந்தமையால் சரவணபவன் ஆயினான். கார்த்திகைப் பெண்கள் தாயாராக வந்து பாலுட்டிய பான்மையால் கார்த்திகேயன் என்று ஒரு பேர் பெற்றான்; அவனுடைய ஆறு உருவங்களையும் நீ ஒன்றாகத் திரட்டிச் சேர்த்தமையால் கந்தன் என்னும் பெயர் பெற்றான். நம் ஆறுமுகங்களும் கந்தனுடைய முகங்களாய் அமைந்தன. பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துமே இவன் பெயரின் ஆறெழுத்தாகப் பொருந்தின. ஆதலால், ஆறுமுகன் நமது சத்தியேயாம். அவனுக்கும் எமக்கும் வேறு பாடில்லை. நம்மைப்போல் அவனும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளான்; குழந்தை போல் இருப்பினும் யாவையும் உணர்ந்தவன்; தன்னை வழிபடும் அடியார்க்குச் செல்வமும் ஞானமும் சிறப்பும் அருள வல்லவன். இனிமேல் குமரவேள் வேதத்திற் கெல்லாம் மூலமாக உள்ள பிரணவத்தின் பொருள் யாது?’ எனப் பிரமதேவனை வினவுவான்; அவன் அறியாமல் விழிப்பான்; அப்போது குமரன் அவன் தலையிற் குட்டிச் சிறைக் கோட்டத்தில் அடைத்துவிட்டுத் தானே பல காலம் படைப்புத் தொழில் புரிவான். அப்பால் தாரகாசுரனையும் சிங்கமுகாசுரனையும் சூரபன்மாவையும், ஏனைய அசுரரையும் அழித்துத் தொலைத்து, தேவர்கள் துயரம் தீர்த்து, அன்னார்க்குப் பேரருள் புரிவான்" என்று பேசினார், பெருமான். மைந்தனது சிறப்பெல்லாம் கேட்டு உமையவள் மன முருகன் மகிழ்ந்திருந்தாள். குமரவேள் அரிய விளையாட்டைக் திருவிளையாடல் புரியலுற்றார்; எட்டுப் கண்டு வானவர் பெருமலைகளையும் ஓரிடத்தில் ஒன்றாகக் வருந்துதல் - கூட்டுவார்; பின்பு அவற்றைத் தலைகீழாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/36&oldid=919825" இலிருந்து மீள்விக்கப்பட்டது