பக்கம்:வேலின் வெற்றி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 29 நிறுத்துவார்; நெடுங் கடல்களை ஒன்றாகச் சேர்ப்பார்; பூவுலகத்தைச் சூழ்ந்த சக்கரவாள மலையைப் பாதலத்திற் செல்ல அழுத்துவார்; அகன்ற கங்கை யாற்றை அடைப்பார்; இவ்வாறு மண்ணுலகில் வாழும் உயிர்களும், விண்ணுலகிலுள்ள தேவரும் அச்சம் கொண்டு நடுங்குதலேயன்றி, அழிவுறாத வகையில் அளவற்ற திருவிளையாடல்கள் புரிந்தார், குமரவேள். இங்ங்னம் எல்லாவற்றையும் நிலைகுலையச் செய்த பாலனை இந்திரன் முதலிய வானவரும் திக்குப் பாலகரும் கண்டு, "அந்தோ: மண்ணையும் விண்ணையும் மாறுபடுத்தியவன் இவனே. இவனைச் சிறு பாலன் எனக் கருதலாகாது. இவன் வலிமை கண்டால் கொடிய அசுர குலங்களிலும் இவன் கொடியவன்; மாயவித்தையில் யாரினும் வல்லவன். இவனை வெம்போரில் வெற்றி கொள்வோம்" என்று எண்ணித் துணிந்தார்கள். வானவர் தல்ைவனாகிய இந்திரன், வலிய தந்தங்கள் பெற்ற வெள்ளை யானையின்மீது ஏறி, வச்சிரம், வாள், குந்தம், சிலை இவற்றைக் கையிலே கொண்டு, போர்க்கோலம் பூண்டு, தேவ சேனையோடு சென்று கந்தப் பெருமானை வளைந்துகொண்டான். அப் பெரும் படையைத் தாக்கின்ார், முருகவேள். போர்க்களத்தில் விழுந்தார். சில தேவர் ஆற்றாது தோற்று ஓடினார், சில தேவர். அப்போது ஊழிக் காலத்தில் எல்லோரையும் அழித்து நின்ற ஈசனை ஒத்தார், முருகன். சூரியனும், சந்திரனும், இந்திரனும் எட்டுத் திக்குப் பாலகரும், வெள்ளையானையும் மடிந்து கிடந்த போர்க் களத்திற்குச் சென்றான், விண்ணவர் குருவாகிய வியாழன் என்னும் பிருகஸ்பதி. எல்லா முணர்ந்த வியாழன் ஒவியத்தில் எழுத முடியாத பேரழகு வாய்ந்த பிள்ளைப் பெருமானைத் தொழுது துதித்து நின்று, "கருணையங் கடலே உலகத்தை வருத்தும் அசுரரையன்றோ நீ ஒறுத்திடல் வேண்டும்? இவ் வேழை வானவர் நின் திருவடியை மறவாத அன்பர்கள். இவர் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தான். அப்பொழுது குமரவேள் புன்னகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/37&oldid=919828" இலிருந்து மீள்விக்கப்பட்டது