பக்கம்:வேலின் வெற்றி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 . வேலின் வெற்றி கொண்டு, இந்திரன் முதலிய தேவர்களும் யானையும் உயிர் பெற்று எழும்படி திருவருள் புரிந்தார். எழுந்த வானவர், முருகவேள் முன்னின்று, "கந்தா போற்றி முக்கட் பெருமான் அளித்த முருகேச போற்றி! பன்னிரு புயத்தாய் போற்றி கடம்ப மலர் அணிந்த முருகனை கடவுளே போற்றி ஆறுமுக ஆதியே போற்றி வழிபடல் . . . . . . • ro, . . . . - - சோதியே போற்றி தற்பரனாய் நின்ற தந்தையே போற்றி என்றும் இளையாய் போற்றி பெரும் பெயர்க் குமரா போற்றி!” என்று தொழுதார்கள். அந் நிலையில் எட்டுத் திசை களும் பதினான்கு உலகமும் எட்டு மலையும், சக்கரவாளகிரியும், ஏழு கடலும், பெரும்புறக் கடலும், அண்ட வரிசையும், அனைத் துயிரும், பொருள்களும் ஆகி, அயன் அரி அரன் என்னும் திரிமூர்த்திகளும் தன்னுள்ளே அமைய ஒரு பேருருவம் (விசுவ ருபம்) கொண்டார் குமார மூர்த்தி. இந்திரன் முதலிய வானவர்கள் அறுமுகப்பெருமான் திருவுருவத்தை அவர் அருளால் அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி, அளவிறந்த அண்டங்களும், அழிவற்ற ஆன்ம கோடிகளும், திரிமூர்த்திகளும் தேவர்களும் அங்கிருப்பக் கண்டு வணங்கித் துதித்தார்கள் "ஐயனே எல்லாவுலகமும் நீயே யாகி நின்ற தன்மையை இந் நாள்வரை அறிந்திலோம். இன்று நீ வந்து உணர்த்தலால் உணர்ந்தோம். எம்பெருமானே! உன் திரு வருவேயன்றி வேறு ஒரு பொருளும் காணோம். சிறியவராகிய நாங்கள் உனது தோற்றத்தை அறிய வல்லமோ? திருமாலும் பிரமனும் நெடுங்காலம் அடிமுடி தேடியும் அறியப்படாமல் அனல் உருவாக நின்ற சிவபெருமான் வடிவே போல் நின் திருவுருவும் அமைந்தது. எம்பெருமானது திருவருளை அவர்கள் எம்மைப்போற் பெற்றிருந்தால் அடயும் முடியும் கண்டிருப்பார் அன்றோ? ஆதலால் எம் ஐயனே நீ அருவுருவாகி நின்ற ஆதி நாயகனே ஆகும். அடியேம் செய்த அருந்தவத்தால் எம் துன்பத்தைத் 'துடைத்து, சூரனாதிய அசுரரைக் கொன்று வானுலகத்தில் ബങ്ങഥ வாழ வைத்தற்காகப் பாலன் வடிவத்தில் வந்தாய்" என்று வணங்கினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/38&oldid=919830" இலிருந்து மீள்விக்கப்பட்டது