பக்கம்:வேலின் வெற்றி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை 3i அப்போது எம்பெருமான் கருணை கூர்ந்து, வான் அளாவி நின்ற பேருருவத்தை நீத்து, ஆறு முகங்களோடு முன்னைய வடிவத்திலே தோன்றினார். வானவர் கோமான் வணங்கித் துதித்து, ‘ஐயனே செருக்கும் தருக்கும் உற்ற சூரன் முதலிய பகைவரை யெல்லாம் அழித்து, வானவரும் யானும் பக்கத்தில் நின்று பணி செய்ய, வானத்தில் உயர்ந்த சுவர்க்க லோகத்தை அடைந்து நீயே என் அரசியலை நடத்தி அருள வேண்டும். இதுவே என் வேண்டுகோள்" என்றான். அன்பினால் வழிபடும் அடியார்க்கு இம்மைச் செல்வமும், மறுமைச் செல்வமும், வீட்டின்பமும் கருணை கூர்ந்து அளிக்கும் அறுமுகப் பெருமானுக்கு இந்திரன் தன் செல்வத்தைக் கொடுப்பதாகக் கூறிய வாசகம், அங்கித் தேவனுக்கு ஒரு தீப்பொறி கொடுப்பேன் என்று ஒருவன் சொல்லும் சொல்லை ஒக்குமன்றோ? அந் நிலையில் இந்திரனை நோக்கிக் குமாரவேள் இளநகை கொண்டு, “நீ நமக்குத் தந்த செல்வத்தை நாம் உனக்குத் தந்தோம். நீங்கள் அனைவரும் சேனைகளாக வருக. நாமே சேன்ாபதியாகி, அசுரர் குலத்தை யெல்லாம் நாசம் செய்வோம். வருந்த வேண்டா" என்று அருளி னார். அப்போது இந்திரனும் வானவ்ரும் தம் மனத்துயர் நீங்கும் வண்ணம் ஐயன்ை அருச்சனை செய்து அன்புடன் வணங்கித் தொழுதனர். கருணை வள்ளல்கிய குமாரவேள் மறைந்து கயிலாய மலைக்குச் சென்றார். நாரத முனிவர் சிவபெருமானை நோக்கி ஒரு வேள்வி Gುಷ.೧೧ನ ಅಹಹ ... ವಿ.." .. களும், தேவர்களும், தவத்தால் உயர்ந்த تھا۔ .۔جتہیے - ஆட்டுக் * வேதியர்களும் சூழ்ந்திருந்து செய்த அவ் 'ே வேள்வித் தீயில் செவ்வானம் போன்ற அ-க்குவித்தல் ஆட்டுக்கிட ஒன்று தோன்றிற்று. எங்கும் யாகம் செய்பவர்கள் எங்கள் இனமாகிய ஆடுகள் பலவற்றைக் கொல்கின்றார்கள்; ஆதலால், யான் இங்கு வேள்வி செய்பவர் களைக் கொல்வேன்" எனத் துணிந்து அங்கித்தேவனது வாகன மாகிய ஆட்டுக்கடா எழுந்து வந்தாற்போல வந்தது. அத் தகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/39&oldid=919831" இலிருந்து மீள்விக்கப்பட்டது