பக்கம்:வேலின் வெற்றி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வேலின் வெற்றி கழுத்தில் அணிந்த மணிகள் கலீர், கலி என்று ஒலிக்க கிண்கிணியும் சிலம்பும் கால்களிற் புலம்ப, விரைந்து வந்த தகரைக் கண்டு யாகசாலையில் இருந்தவர்கள் அச்சமுற்றுச் சிதறி ஓடினர். இங்ங்ணம் அத் தகர் எங்கும் திரிந்து சீற்றத்தோடு உயிர்களைச் சிதைத்து வருகையில், முனிவர்களும் நாரதரும் வானவரும் ஓடிக் கயிலாய மலையை அடைந்தார்கள்; அங்கு முருகவேளைக் கண்டு அடிபணிந்தார்கள். அன்னார் கொண்ட துயர் கண்ட பெருமான், "நீங்கள் மிக வருந்துகின்றீர்கள்; என்ன் நேர்ந்தது?" என்று வினவினார். - "ஜயனே! சீற்றமுற்று எழுந்து ஒரு தகர் அழிவுசெய்து திரிகின்றது. அதன் ஆற்றலை அடக்கி, எமது அச்சம் தீர்த்து, யாகக் குறைவையும் நிறைவேற்றி எங்களைப் பாதுகாத்தல் வேண்டும். என அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களைக் குமாரவேள் அருளோடு நோக்கி, அஞ்ச வேண்டா என்று அபயம் அளித்தார்; தம்மையே தஞ்சமாகக்கொண்டு வணங்கும் பரிசனங்களுள் வீரவாகுவை நோக்கி, "நெருப்பிலே பிறந்து இம் முனிவர் செய்யும் வேள்வியை அழித்து விண்ணிலும் மண்ணிலும் உள்ள உயிர்களைக் கொன்று திரிகின்றதாம் ஒரு தகர். அதனை விரைவிற் சென்று கொண்டுவா என்று பணித்தார். அப் பணி தலை மேற்கொண்ட வீரவாகு, எல்லோரும் நடுங்கக் கொல்லும் தொழிலைக் கொண்ட அத் தகர் அஞ்சும் வண்ணம் ஆரவாரித்து விரைந்து போந்து, அதன் கொம்புகளைப் பற்றி, இழுத்துக்கொண்டு, கயிலாய மலையை அடைந்து முருகவேள் முன்னே விடுத்தார். குற்றமற்ற முனிவரும் தேவரும் மனமகிழ்ந்தார்கள். நாரத முனி வரும் மீண்டும் பூவுலகிற் போந்து வேள்வியை நிறைவேற்றினார். அவர் ஆற்றிய தவத்தால் அன்றுமுதல் முருகவேள் அம் மேடத்தை வாகனமாகக் கொண்டார். - இங்ங்னம் மேட மூர்த்தியாகிய முருகவேள் திருக்கயிலாய செருக்குற்ற மலையில் விளையாடிக்கொண்டிருக்கையில் பிரமனை முருகன் ஒரு நாள் பிரமன் முதலாயினோர் சிவ சிறை செய்தல் பெருமான் திருவடிகளைத் தரிசிக்க ஆங்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/40&oldid=919835" இலிருந்து மீள்விக்கப்பட்டது