பக்கம்:வேலின் வெற்றி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - வேலின் வெற்றி கந்தமாதன கிரியை அடைந்து தாமே எல்லா உயிர்களையும் படைக்கத் திருவுளம் கொண்டார். மன்னுயிர்க்கு உயிராய், பரஞ்சுடர் ஒளியாய், வேதத்தின் எல்லையாய், படைத்தல் முதலிய ஐந்தொழிலுக்கும் மூலமாய் அமைந்த அறுமுகச் செவ்வேள் பிரமதேவனாக அமர்ந்து படைத்ததும் ஓர் அற்புதமோ? இவ்வாறு நெடுங்காலம் கழிந்தது. பிரமதேவனைச் சிறையி . ரிைன்றும் விடுவிக்கக் கருதிய திருமால், தேவர்க திருமால் . ளோடும் முனிவர்களோடும் திருக்கயிலாய மலையை அனுபடlulai.iற்று, தின் 芯前事gö60馆 தலைவன முறையிடல் திருவடிகளிலே விழுந்து எழுந்து, "ஆண்டவனே! நின் மகன் இங்கு வந்த பிரமதேவனைப் பிரணவத்தின் பொருள் கேட்டான், அதனை அறியாத அவனைச் சிறையில் இட்டான், படைப்புத் தொழிலும் தானே செய்கின்றான். ஐயனே கந்தவேள் போலவே பிரமனும் உமக்குப் பிள்ளையே அவன் தீவினையால் அள விறந்த காலம் அருஞ்சிறையில் அகப்பட்டு மனம் நொந்து வாடி வருந்துகின்றான்” என்று விண்ணப்பம் செய்தான். அது கேட்ட சிவபெருமான் மனமிரங்கி, இடபத்தின் மேல் எழுந்தருளி, அறுமுகப் பெருமான் வீற்றிருந்த கோயில் முன்னே வாகனத்தினின்றும் இறங்கி, வானவர் போற்ற ళ உள்ளே சென்றார். கருணையோடு வந்த ' பெருமானைக் கண்ட முருகவேள், 'என் தந்தை ந்தார் என்று மனமகிழ்ந்து எழுந்து எதிர்கொண்டு அவர் திருவடிகளை வணங்கி, அவரை அழைத்துச் சென்று அழகிய அரியாசனத்தில் எழுந்தருளச்செய்து, "உயிர்க்குயிராகிய கர்த்தனே! இங்குப் போந்த காரியம் யாது?" என்று வினவினார். அப்போது சிவபெருமான், "ஐய! மெல்லிய மலர்க் கோயிலில் வசிக்கும் பிரமனைச் சிறையில் நீ அடைத்து வைத்தாய் அச் சிறையை நீக்கக் கருதித் திருமால் முதலிய தேவருடன் இங்கு வந்தோம். அவன்ை விட்டுவிடு" என்று கூறினார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/42&oldid=919839" இலிருந்து மீள்விக்கப்பட்டது