பக்கம்:வேலின் வெற்றி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ள்ை . 35 இங்ங்னம் ஈசன் அன்புடன் பேசிய இனிய மொழிகளைக் கேட்ட முருகவேள், தலையில் அமைந்த அழகிய திருமுடியை அசைத்து, "ஐயனே, எவ்வுயிர்க்கும் உறுதி பயப்பதாகிய பிரணவத்தின் பொருள் அறியாத பிரமன், சதா காலமும் உயிர் களைப் படைக்கின்றான். என்பது பேதைமையே! அவன் வேதங் களை உணர்ந்தான் என்பதும் அத் தன்மையதே, எல்லா உலகங் களையும் படைக்கின்ற பெருந் தொழிலைக் கைக்கொண்டிருத்த லால், பிரமன் யாரையும் எப் பொருளையும் மதிக்கின்ற னல்லன், நித்தலும் உம்மை வழிபட்டும், தான் என்னும் அகங்காரம் தவிர்ந் தானில்லை. ஆதலால், அவனைச் சிறையினின்று நீக்கமாட்டேன்’ என்று கூறினார். அப்போது கருணை வள்ளலாகிய சிவபெருமான், “மைந்தனே என்ன செயல் செய்கின்றாய் பிரமனை விடும்படி நந்தியிடம் செல்லியனுப்பினோம். அவன் சொன்ன சொல்லையும் செவியிற் கொள்ளவில்லை. இங்கு நாமே வந்து சொல்லியும் கேட்கவில்லை; தடுத்துப் பேசுகின்றாய்" என்று கோபிப்பார் போலக் கூறினார். எம்பெருமானது திருவுள்ளக் குறிப்பை உணர்ந்த அறுமுகன், "ஐயனே! உமது சித்தம் இதுவாயின், பிரம தேவனைச் சிறையினின்று விடுவித்து விரைவில் தருவேன் என்று அன்புடன் பணிந்தார். அவ்வண்ணமே செய்க என்று பெருமான் அருள்புரிந்தார். ... - அந் நிலையில் பூதர்களுள் சிலர் சென்று, ஒரு குகையில் ஒடுங்கியிருந்த பிரமதேவனது விலங்கைத் தறித்து, அவனைக் கொண்டுசென்று குன்றுதோ றாடும் குமரவேள் முன்னே விட்டார்கள். அவர் பிரமதேவன் கையைப் பற்றி அழைத்துச் சென்று எம்பெருமான் முன்னே விட்டார். ஈசனது பாதம் பணிந்து எழுந்து, வெட்கத்தால் குறுகி நின்றான் பிரமன், ஈசன் அவனை நோக்கி, "இருஞ்சிறையில் பல நாள் இருந்து இளைத்தாய் போலும்" என்று கூறியருளினார். இவ்வாறு நாதன் நல்ல்ருள் புரிந்த போது பிரமதேவன், "ஐயனே குமரவேள் கொடுத்த தண்டனை குற்றமன்று. அது நல்லறிவு தந்தது என் அகங் காரத்தை ஒழித்தது; துன்பம் பயக்கும் தீவினைகளை அழித்தது: என்னைப் புனிதன் ஆக்கியது என்று பேசினான். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வேலின்_வெற்றி.pdf/43&oldid=919841" இலிருந்து மீள்விக்கப்பட்டது