பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 729 'இதோ, காத்திருக்கிறேன்!” என்று அந்தக் காலையும் தூக்கித் தன் தொடையின் மேல் வைத்துக் கொண்டு, மற்றொரு செருப்பை எடுத்து மாட்டினார் பத்மநாபன். அவள் சற்றே எழுந்து இரண்டு கால்களையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, "பரவாயில்லை - எங்கே, அந்தச் சிவப்பு நிறப் பட்டை போட்ட செருப்பை எடுத்து மாட்டுங்கள், பார்க்கலாம்?" என்றாள். "நான் ஒரு பாவி லீலா, நீ சொல்லும் வரை சும்மா இருந்துவிட்டேனே' என்று தன்னைத் தானே நொந்துகொண்ட வண்ணம் அவசரம் அவசரமாக அவற்றைக் கழற்றிக் கீழே எறிந்து விட்டுச் சிவப்பு நிறச் செருப்பை எடுத்து மாட்டினார் பத்மநாபன். அதன் அழகைப் பத்மநாபனோடு தானும் பார்த்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக லீலா எழுந்தாள். அதற்குள் இன்னொரு காலையும் தூக்கிச் செருப்பை மாட்டிவிட்டு, இரண்டு கால்களையும் இரு கைகளால் அள்ளிக் கன்னத்தில் ஒத்தி ஒத்தி எடுத்த வண்ணம், "ஆஹா, வாரிக் கொண்டு போகிறது! அப்படியே வாரிக் கொண்டு போகிறது!" என்று உட்கார்ந்தது உட்கார்ந்தபடி எழும்பி எழும்பிக் குதித்தார் படாதிபதி.