பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 749 பூர்வ கதை முத்தாயி கண்ணிழந்தவள் அவளுக்குக் கைக் கோலாயிருந்தான் அவளுடைய ஒரே மகனான ரத்தினம் இவர்கள் இருவருக்கும், இவர்களைச் சேர்ந்த இன்னும் சிலருக்கும் மனிதர்கள் அளிக்காத ஆதரவை ஒரு தெருவிளக்கு அளித்துக் கொண்டிருந்தது அதன் மடியிலே இவர்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்தனர். முத்தாயி பிச்சைக் காரியாயிருந்து பணக்காரர் களின் பரலோக வாழ்க்கை'க்கு உதவி வந்தாள்; ரத்தினம் கப்பல் கூலியாயிருந்து அவர்களுடைய இகலோக வாழ்க்கைக்கு உதவி வந்தான் இவர்களுக்கு அடுத்த வீட்டுக்காரர்களாய் இருந்தவர்கள் அந்தோணியும் ஆரோக்கியசாமியும். அந்தோணி ரத்தினத்தின் நண்பன் ஆரோக்கிய சாமி இவர்கள் அனைவருக்கும் ஞான போதகன்' ஒரு நாள் வேலையில்லாப் பட்டதாரி ஒருவன் - அவன் பெயர் ஒ.கே - தினசரிப் பத்திரிகையொன்றைப் பிரித்து, அதிலுள்ள வாண்டெட் காலத்தைப் பார்த்துக் கொண்டே வருகிறான்.