பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வேலை நிறுத்தம் ஏன்? 10 கட்சிச் சண்டை முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் தகராறுகளைச் சமரசமான முறையில் தீர்த்து வைப்பது சாத்தியமில்லாத காரியமல்ல அதிலும் பொதுஜன சர்க்காரால் மேற்கூறிய தகராறுகளைத் தீர்த்து வைக்க முடியவில்லை யென்றால் வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது. பதவிக்கு வந்ததும் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களை மந்திரிமார்கள் மறந்து விடுவது மன்னிக்க முடியாத குற்றமாகும். அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னால் அவர்கள் பொது ஜனங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரத்துக்கு வந்ததும் ஏனோ அந்தத் தொடர்பிலிருந்து கூடியவரை விலகிக் கொள்ளப் பார்க்கிறார்கள் !