பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 வேலை நிறுத்தம் ஏன்? பொதுஜனங்களும் வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர் களாக இருக்க முடியாது தொழிலாளிகள்தான் பொதுஜனங்கள்; பொது ஜனங்கள்தான் தொழிலாளிகள் பொதுமக்களின் சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றில் பாடுபடும் மக்களுக்கும் பங்கு உண்டு; அதே மாதிரி பாடுபடும் மக்களின் சுக துக்கங்கள், வெற்றி தோல்விகள் ஆகியவற்றில் பொது மக்களுக்கும் பங்கு உண்டு. ஆகவே, பழியைப் பொதுஜனங்களின் மீது சுமத்துவதன் மூலம், சர்க்கார் தொழிலாளருக்கு இழைக்கும் கொடுமைகளிலிருந்து தப்ப முடியாது. என்னதான் அபத்தப் பிரச்சாரம் செய்தாலும், மேற்கூறிய பயங்கரமான அடக்குமுறைகளுக்கெல்லாம் உண்மையான காரணம் என்ன வென்பது பொது ஜனங்களில் சிலருக்காவது தெரியும். அதிலும், அந்த விஷயத்தில் சென்னை மாகாணப் பொது மக்களில் பெரும்பாலோரை ஒருநாளும் ஏமாற்ற முடியாது. பிரகாசம் சர்க்கார் கம்யூனிஸ்டுகளைப் பழி வாங்குவதற்குப் பதிலாக, வயிற்றுக் கொடுமையைக்