பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வேலை நிறுத்தம் ஏன்? திருச்சி ஜில்லாவில் பல கிராமங்களில் நூற்றுக்குப் பதினாறு பங்குதானாம்! இந்தப் பங்குக்காக விவசாயி சாகுபடி செலவு பூராவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மிராசுதாருக்கு அந்தச் செலவைப் பற்றிக் கவலையே கிடையாது! இந்தப் பஞ்சகாலத்தில் நூற்றுக்கு இருபது பங்கு கொடுப்பதற்குப் பதிலாக இருபத்தேழரைப் பங்காவது கொடுக்க வேண்டுமென்று சொந்த நிலம் இல்லாத விவசாயிகள் பலர் இன்று எங்கும் கிளர்ச்சி செய்கிறார்கள். மிராசுதார்களோ, “எங்கள் நிலம் தரிசாய்க் கிடந்தாலும் கிடக்கட்டும்; உங்களுக்கு மேற்கொண்டு ஏழரைப் பங்குமட்டும் கொடுக்க மாட்டோம்!" என்று இந்த உணவுப் பஞ்சகாலத்தில் பிடிவாதம் பிடிக்கிறார்கள் ! உடை விஷயத்தில் ஏழை விவசாயியைப் பின்பற்றி வாழ்ந்துவரும் மகாத்மாவின் ஆசீர்வாதம் பெற்ற காங்கிரஸ் சர்க்காரோ, "மிராசுதார்கள் சொல்வதுதான் சரி" என்று சாதிக்கிறது!