பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() வேலை நிறுத்தம் ஏன்? ஆங்கில வருஷப் பிறப்புக்கு விடுமுறை அளிக்கும் முதலாளிகள், தமிழ் வருஷப் பிறப்புக்கு விடுமுறை அளிக்க மறுத்தார்கள். அதன் பேரில் சுமார் நானூறு தொழிலாளிகள் அரை நாள் தாங்களாகவே லீவு எடுத்துக் கொண்டார்கள். மறுநாள் அவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ள முதலாளிகள் மறுக்கவே, சகோதரத் தொழிலாளிகளிடம் அநுதாபங்கொண்டு மற்றத் தொழிலாளிகளும் வேலை நிறுத்தம் செய்தார்கள். போலீஸார் அவர்களில் பலருடைய மண்டையை உடைத்த பிறகு, சர்க்காரால் சர்வரோக நிவாரணியான மத்தியஸ்தர் நியமிக்கப் பட்டார். அவருடைய தீர்ப்பு முதலாளிகளுக்குச் சாதகமாக இருந்தது. அதனால்தானோ என்னவோ, அந்தத் தீர்ப்பைப் பிரகாசம் சர்க்கார் மறுதளிக்கவில்லை. எண்ணுறு தொழிலாளிகளை, முதலாளிகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள், !