பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வேலை நிறுத்தம் ஏன்? தெருவிளக்கு தூங்கிக் கொண்டிருந்தது; விழித்துக் கொண்ட சென்னை மாநகரமோ அதன் துாக்கத்தைப் பொருட்படுத்தாமல் வழக்கம் போல் விரோதமும் குரோதமும் நிறைந்த தன் அசட்டுக் குழந்தைகளை எழுப்பி விளையாட விட்டது அந்தக் குழந்தைகளில் சில மாடி வீடுகளில் வசிப்பவை; வேறு சில மண் குடிசைகளில் வசிப்பவை. மண் குடிசையில் வசிக்கும் குழந்தைகளுக்குத் தெரு விளக்கு பொதுவுடமை வாதியாகக் காட்சியளித்தது. மாடி வீட்டில் வசிக்கும் குழந்தைகளுக்கோ, அது இல்லாதவன் இருட்டில் செய்யும் பொல்லாமை யிலிருந்து தங்களைக் காக்கும் வல்லவனாகக் காட்சியளித்தது. இந்தக் குழந்தைகளைத் தவிர இன்னும் சில குழந்தைகளும் மேற்படி நகரத்தில் இருந்தன; அவை அனாதைக் குழந்தைகள் - அந்தக் குழந்தைகளுக்கு மாடி வீடும் இல்லை, மண் குடிசையும் இல்லை - ஆனால் மனம் இருந்தது! மனம் இருக்கும் இடத்திலே பணம் இருக்குமா? இல்லை, பணம் இருக்கும் இடத்திலே மனந்தான் இருக்குமா? - இத்தகைய இரண்டுங் கெட்டான் உலகிலே, எண்ணெயோ மின்சாரமோ இன்றி எரியக் கூடிய விதத்தில் எவனோ கொடுத்த இரு கண்