பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விந்தன் 87 “கந்த லீலா அல்லவா எடுக்கப் போவதாகச் சொன்னார்!"இப்படி முணுமுணுத்தது பீதாம்பரத்தின் வாய் "அதிலே ரெண்டு ஹரீரோயினுக்கு மேலே வேலை இருக்காதே! பதிலுக்கு இப்படி முணுமுணுத்தது ஒ.கே.யின் வாய் 'அதற்காக இங்கே கிருஷ்ண லீலாவுக்கு ஒத்திகை நடக்கிறதா உன் நெனைப்போ?" "ஊஹாம்; ஏகப்பட்ட ஹரீரோயின்'களுக்குச் 'சான்ஸ்' இருந்தாத்தானே எல்லாவற்றுக்கும் செளகரியமாயிருக்கும்னு சொன்னேன்!" "ஏது! பலே ஆளாயிருக்கியே, நீ? - முதலாளி காப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஐயா, ஒரு நிமிஷம் அப்படிப் போய் உட்காரும்; இதோ வந்து விடுவார்!" "ரொம்ப நல்லதாப் போச்சு எனக்கும் காப்பி சாப்பிட்டாத் தேவலை போலிருக்கு!' என்று பீதாம்பரத்தை இழுத்து அப்பால் விட்டுவிட்டுச் சரேலென்று உள்ளே நுழைந்துவிட்டான் ஒ கே. 'நம்பர் 93 - போன் ப்ளிஸ்! நம்பர் 93 - போன் ப்ளிஸ்!” என்று கத்தினான் பீதாம்பரம்.