பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$)() வேலை நிறுத்தம் ஏன்? "உன் ஸ்பீட்டுக்கு!" என்று வெறுப்புடன் சொல்லிக் கொண்டே, அவனைத் தன் தோளால் கொஞ்சம் நெட்டித் தள்ளிவிட்டுப் பாதரட்சைகளைப் பின் ளபீட்டில் பயபக்தியுடன் வைத்தான் பீதாம்பரம் "தேவலையே, பரதன் ஒரு ஜதைக்குப் பட்டாபிஷேகம் நடத்தினால் நீங்கள் ஒன்பது ஜதைக்குப் பட்டாபிஷேகம் நடத்துகிறீர்களே?” என்றான் ஓ.கே. "அது என் இஷ்டம், நீ போய் உன் வேலையைப் JTfr!” "என் வேலையைத் தவிர, பிறர் வேலையில் நான் எப்பொழுதுமே தலையிடுவதில்லை." "கதவுக்கருகே நிற்பதா உன் வேலை?" "ஆமாம்." 'இல்லை; கார் ஒட்டுவதுதான் உன் வேலை!" 'இரண்டும்தான் முதலாளி வந்ததும் கதவைத் திறந்து விட்டுவிட்டு நிற்பேன் ஏறி உட்கார்ந்ததும் ஒட்டுவேன்...!" "முடியாது; கதவை நான் தான் திறப்பேன்!" "மன்னிக்கவும், அது உங்கள் வேலையல்ல."