பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 வேலை நிறுத்தம் ஏன்? மேல் தைக்கப்பட்டிருந்த ஜிகினாவின் கீறல் விழுந்து லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருந்தது "எங்கே அந்த மடையன்?" என்று கண்களில் தீப்பொறி பறக்க இரைந்தார். 'இதோ இருக்கிறேன்!" என்று அவருக்கு எதிரே வந்து நின்றான் பீதாம்பரம். "உன்னை அழைக்கலேடா, மண்டு! - எங்கே அந்தக் காஸ்ட்யூம் டைரக்டர்?” 'இதோ வந்துவிட்டேன்!” என்று பறந்து வந்தார் அவர். "ஏன் ஐயா, உமக்கு நான் எத்தனை தரம் சொல்வது? - அம்மாவுக்குத் தைக்கிற ஜாக்கெட்டிலே மட்டும் ஜிகினா வேலை, கிகினா வேலை ஒன்றுமே செய்ய வேண்டாமென்று!" "காஸ்ட்யூம் கொஞ்சம் ரிச்சா இருந்தாத்தானே ஸார், அம்மா ராஜ வம்சத்தை சேர்ந்தவங்கன்னு படத்திலே தெரியும். " 'இதோ பாரும், நீங்கள் எனக்கொன்றும் யோசனை சொல்ல வேண்டாம் - நான் சொல்கிறபடி