பக்கம்:வேலை நிறுத்தம் ஏன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.8 வேலை நிறுத்தம் ஏன்? பிடிக்கிறேன்; நீங்கள் கட்டுக் கட்டுங்கள், போதும்!" என்றார் டாக்டர் புன்னகையுடன் அப்படியே செய்து விட்டுப் போனார். அவர் தலை மறைந்ததும் நட்சத்திரத்தைத் துாக்கி நாற்காலியின் மேல் உட்கார வைத்துவிட்டு, மின்சார விசிறியின் ஸ்விட் சைத் தட்டிவிட்டார் படாதிபதி. இதனால் விரலோடு உச்சியுங் குளிர்ந்த லீலா, தாங்ஸ், உங்களுக்கு ரொம்பச் சிரமம் கொடுத்து விட்டேன்' என்றாள். "சரியாப் போச்சு, உன்னைத் தொட்டுத் துர்க்க என்னை அனுமதித்த உனக்கு நானல்லவா தாங்ஸ்’ சொல்ல வேண்டும்!" என்றார் பத்மநாபன். பதிலுக்கு விலை உயர்ந்த சிரிப்'பொன்றைப் போனாற் போகிறதென்று உதிர்த்தாள் நட்சத்திரம். அவ்வளவுதான் வந்தது மோசம் - படாதிபதியை யாரோ, எங்கேயோ மேலே மேலே தூக்கிக் கொண்டு செல்வது போலிருந்தது. "நான் எங்கே இருக்கிறேன்? எங்கே போகிறேன்?" என்று அப்படியும் இப்படியுமாக அசைந்தசைந்து தடுமாறினார்.