பக்கம்:வைணமும் தமிழும்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பன்னிரு ஆழ்வார்கள்

95


பிரிந்தனர். பின்னர் இந்த ஆழ்வார் முதலாழ்வார்கள் அவதரித்த திருத்தலங்களைத் தரிசித்து விட்டுத் 'திருக்குடந்தை' செல்லத் திருவுள்ளம் கொண்டார் இடையில் 'கச்சிநகர் திருவெஃகாவில்' எழுந்தருளியிருந்து தமக்கு உரிய பணிபுரிந்து வந்த மூதாட்டி ஒருத்தியைக் குமரியாக்கினார். இதனை அறிந்த அந்நகரத்து வேந்தன் தன் கிழத்தனத்தையும் போக்கியருளுமாறு கணிகண்ணன் மூலம் ஆழ்வாரை வேண்ட, அவர் அதற்கு இணங்கவில்லை. அரசன் அவ்விருவரையும் நகரை விட்டு வெளி யேறுமாறு ஆணையிடடான். உடனே வெஃகணைக் கிடந்த திருமாலையும் தம்முடன் வெளியேறுமாறு வேண்டி மூவருமாக நகரை விட்டேகினர். இச்செய்தியை அறிந்த மன்னன் ஆழ்வாரின் பெருமையை உணர்ந்து அவரை மீண்டும் நகருக்கு வருமாறு வேண்டியழைத்து அவருக்குத் தொண்டு பூண்டனன் ஆழ்வார் தம் வாணாளின் இறுதியில் திருக்குடந்தையில் வாழ்ந்து திருநாட்டை அலங்கரித்தனர். இதனால் கும்பகோணத்தைத் 'திருமழிசைப் பிரான் உகந்த இடம்' என்று பேசுகின்றார். வியாக்கியானச் சக்கரவர்த்தி பெரியவாச்சான் பிள்ளை, கும்பகோணத்திற்கு 'குடமுக்கு' ‘குடமூக்கில்' என்ற திருநாமங்கள் உண்டு. எனவே, திருமழிசையாழ்வார் “குடமுக்கிற் பகவர்"(கும்ப கோணத்து பாகவதர்) என்று ஒரு சமண ஆசிரியர்குறிப்பிடுகின்றார். 'முக்காலமும் உணர்ந்த முனிவர்களில் ஒருவர்' என்றும் பாராட்டுகின்றார் அந்த ஆசிரியர். இதனால் குருபரம்பரைக் கதைகள் தோன்றுவதற்கு முன்னரே பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் இவர்களைப்போல் திருமழிசையாரும் தமிழர்களால் பெரிதும் போற்றப் பெற்றனர் என்பதை அறியமுடிகின்றது.