பக்கம்:வைணமும் தமிழும்.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவ சீலர்கள்

173


பெயருடன் ‘திவ்வியகவி’ என்ற முன்னொட்டையும் சேர்த்து மகிழ்கின்றது. இவர் “சிலேடை, யமகம், திரிபு, அந்தாதி, கலம்பகம், ஊசல் முதலியவற்றை விசித்திரமாகப்பாடுவதில் வல்லவர் என்பதும் இவர்தம் நூல்களால் தெளிவாகும். நாலாயிரத்தின் சாரப் பொருள்களும், இவர்தம் பாடல்களில் பொதிந்திருக்கும் மாத்திரமேயன்றி,"சொல் நோக்கும், பொருள் நோக்கும், தொடைநோக்கும், நடைநோக்கும், துறையின் நோக்கும், என்நோக்கும் காண” இலக்கியமாகவும் இனிப்பனவாக அமைந்தனவாகும். இவர்தம் பாடல்களைக் கற்போர் சிறந்த புலவர்களாகத் திகழ்பவர் என்பதில் ஐயம் இல்லை.

2. அடியார்கள்

(1).கூரத்தாழ்வான்: இராமாம்சம் காஞ்சியை அடுத்தகூரம் என்ற ஊரில் இராமசோமயாசிக்குத் திருமகனாய் அவதரித்தார். திருநட்சத்திரம்- தை-அஸ்தம்.வேறு திருநாமங்கள்:ஸ்ரீவச்சின்ன மிஸ்ரர், நடையாடு பதஞ்சலி, யதீந்திர சரணன், கூரேசர், கூராதிபர், கூராதிபதி, கூரநாதன், ஸ்ரீவத்ஸ்சிஹ்நர். தேவிகள் : கூரத்தாண்டாள். குமாரர்கள் : பட்டர், சீராமப்பிள்ளை சீடர்கள்: பிள்ளைப் பிள்ளை ஆழ்வான், திருவரங்கத்தமுதனார், நாலூரான் அகளங்க பிரம்மராயன். இவர் அருளிய நூல்கள்; “வரதராஜஸ்தவம், சுந்தர பாகூஸ்தவம், அதிமாதுஸ்தவம், ஸ்ரீவைகுண்டஸ்தவம், யமனரத்னாரம், கத்யதிரய; (திரயம்மூன்று வியாக்கியானம்” ஆகியவை.

இவர்தம் ஆசாரியர் இராமாநுசர் குரு-சீடர் தொடர்பு அற்புதமானது. கல்நெஞ்சத்தையும் உருக்கும் தன்மையது. இராமாநுசர் வேடத்துடன் சோழன்முன் சென்று தம்