பக்கம்:வைணமும் தமிழும்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

வைணவமும் தமிழும்


என்று மணிவாசகப் பெருமான் கூறியுள்ளதை நினைவு கூரலாம். பாரதியாரும் ,

         நக்க பிரானருளால்-இங்கு
             நடைபெறும் உலகங்கள்- கணக்கிலாம்!
         தொக்கன அண்டங்கள்- வளர்
             தொகைபல கோடிபல் கோடிகளாம்!
         இக்கணக் கெவரறிவார்-புவி
             எத்தனை யுளதென்ப தியாரறிவார்!
         நக்க பிரானறிவான்;- மற்று
             நானறியேன்பிற நரரறியார்?

என்று கூறியுள்ளதை நினைவு கூர்ந்து மகிழலாம்.

அண்டங்கள் அமைப்பு வருமாறு : கீழ் அண்ட கபாலத்தின்மேல் எண்பத்துமூன்றரை (83%) இலட்சம் யோசனை உயரம் உள்ளது கர்ப்போதகம். இதன் மேல் ஒவ்வொன்றும் பதினாயிரம் யோசனை உயரமும் அகலமும் உள்ள அதலம், விதலம், நிதலம், தராதலம், மகாதலம்,சுதலம், பாதளம் என்ற பெயர்களையுடைய ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றின்மீது மனிதர்கள் வாழும் பூலோகம் உள்ளது. இஃது எழுபதினாயிரம் யோசனை அகலமுடையது. இதில் ஏழு தீபங்களும், ஏழு மாக்கடல்களும், ஏழு குலபர்வதங்களும் அடங்கியிருக்கும். இந்த உலகிற்குமேல் சூரியனுக்குக்கீழ் நூறாயிரம் யோசனை உயரமுடையதாய் இருப்பது புவர் லோகம். இதில் கந்தர்வர்கள் வசிப்பர். சூரியனுக்குமேல் துருவனுக்குக்கீழ் பதினான்காயிரம் யோசனை உயரத்தி லுள்ளது ‘சுவர்லோகம். இதில் நட்சத்திரங்கள், கிரகங்கள்,


9. பா.க.தோ.பா. கோமதியின் மகிமை-(4-5)


9. பா.க.தோ.பா. கோமதியின் மகிமை-(4-5)