பக்கம்:வைணமும் தமிழும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைணவமும் தமிழும்

7


'புள்ளனி நீள்கொடிச் செல்வன்'[1]
'நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலையிய
'உலகங் காக்கும் ஒன்றுபுரி கொள்கை’ [2]
'இருநிலங் கடந்த திருமறு மார்பின்
'முந்நீர் வண்ணன் பிறக்கடை'[3]
‘அவ்வயின், அருந்திறல் கடவுள் வாழ்த்தி'[4]

[அத்திரு வெஃகாவணையில் அரிய திறலினை யுடைய திருமாலை வாழ்த்தி]

‘காந்தளஞ் சிலம்பில் கயிறு நீடுகுலைப் படிந்தாங்குப்
பாம்பனைப் பள்ளியமர்ந்தோன் ஆங்கண்.’[5]
‘வலம்புரி பொறித்த நேமியொடு மாதாங்கு தடக்கை
நீர்செல நிமிர்ந்த மாஅல் போல’[6]

[நேமியொடு, வலம் புரிதாங்கு தடக்கை மாஅல் -சக்கரத்தோடே வலம் புரியைத் தாங்கும் பெரிய கையையுடைய மால். மா- பொறித்தமா. அல் - திருமார்பிடத்தே திருமகளை வைத்த மால். நீர்செல நிமிர்ந்த மாஅல் போல - மாவலி வார்த்த நீர் தன் கையிலே சென்றதாக உயர்ந்த திருமால் போல]


  1. திருமுருகு- அடி 181
  2. மேலது.- 160-161
  3. பெரும்பாண்- (22,31)
  4. மேலது (390-91) இது பிரம்ம தேவர் செய்த வேள்வியினை அழிக்க வந்த வேகவதி நதியைத் தடுத்தற்பொருட்டுத் திருமால் பள்ளி கொண்டு அணைபோற் கிடந்த தலம்; இங்கே கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருமாலுக்கு வேகாசேது என்பது திருநாமம்.
  5. மேலது (371-73)
  6. முல்லைப் (1-3)