பக்கம்:வைணமும் தமிழும்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238

வைணவமும் தமிழும்


           திடவிசும்பு எரிநீர் திங்களும் சுடரும்
               செழு நிலத்து உயிர்களும் மற்றும்
           படர்பொருள் களுமாய் நின்றவன்(பெரி. திரு. 4.3;3)

என்ற திருமங்கை மன்னன் பாசுரத்தில் செழு நிலத்து உயிர்களும் என்பதால் உயிரும் (சித்தும்) ஏனையவற்றால் ‘அசித்தும்' சேர்த்துக் கூறப் பெற்றிருப்பதைக் காணலாம்.

(viii)ஆதார-ஆதேய சம்பந்தம்: ஆதாரம்தாங்குவது: பரமான்மா. ஆதேயம்- தாங்கப்பெறுவது; சீவன்மா. திருவாய் மொழியில் நெடுமாற்கு அடிமை (810) என்ற திருப்பதிகத்தில் உள்ள,

       தனிமாப் புகழே எஞ்ஞான்றும்
           நிற்கும் படியாத் தான்தோன்றி
       முனிமாப் பிரம முதல் வித்தாய்
           உலகம் மூன்றும் முளைப்பித்த
       தனிமாத் தெய்வம் (7)

என்ற பாசுரத்தில் எம்பெருமான்குக்குமசித்து அசித்துகளுடன் கூடியவன் என்று சொல்லப் பெறுகின்றது. இத்தகைய எம்பெருமான் சமஸ்டி சிருஷ்டியையும், வியஷ்டிசிருஷ்டி யையும் செய்விக்கின்றான். சமஷ்டி-தொகுதி. இருபத்துநான்கு தத்துவங்களையும் கலந்து ஈசுவரன் தானாகவும், நான்முகன் மூலமாகவும் இந்த ஒப்பற்ற அண்டத்தைப் படைக்கின்றான். அண்டத்தைப் படைத்து அதற்குள் நான்முகனைப்படைத்தல், சமஷ்டி சிருஷ்டி என்று வழங்கப் பெறும். நான்முகன் மூலமாக இந்த அண்டத்திற்குட்பட்ட பதினான்கு உலகங்களையும் தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், தாவரங்கள்