பக்கம்:வைணமும் தமிழும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

243



(4) பயனை அடைவதற்குத் தடையாக உள்ளவைகள்: திருவாய்மொழியிலுள்ள விடுமின் முற்றவும் 2)சொன்னால் விரோதம்இது (3.9) ஒருநாயகமாய் (41), கொண்ட பெண்டிர் (91) என்ற நான்கு திருப்பதிகங்களிலும் நுவலப்பெற்றுள் ளனவாக மொழிந்து சென்றனர்.

(5) பயனை அடையும் வழிகள் : திருவாய்மொழியி லுள்ள நோற்ற நோன்பும் (5, 7) ஆராவமுதே'(58) மானேய் நோக்கு (59) பிறந்தவாறும் (510) என்ற நான்கு திருப்பதிகங் களிலும் கூறப்பெற்றுள்ளனவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

திருப்பாவையிலும் அர்த்த பஞ்சகம் இருப்பதாக நம்பூருவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

() இறைவனின் இயல்பு: திரிமூர்த்தி சொரூபமாகிய நாராயணனை நோக்கியே இந்த நோன்பு நோற்கத் தக்கது என்பது ஆண்டாளுடைய உள்ளக்கிடக்கை. ஆதலால் 'மார்கழித் திங்கள்’ (1) என்ற முதற் பாசுரத்தில்

         ‘நாராயணனே
             நமக்கே பறைதருவான்’

என்ற அடியில் பரத்திலுள்ள நாராயணனைப் பாடுகின்றாள் ‘பறை தருவான்’ என்பதால் எதிர்பார்க்கும் பொருளை நல்குவான் என்ற பொருளைத் தரும்,

வையத்து (2) என்ற இரண்டாம் பாசுரத்தில்

‘பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி’

என்ற அடிகளில் வியூகருபமாகப் பரன் பாற்கடலில் பையத் துயிலும் மூர்த்தியைக் காட்டுகின்றாள். ஆயச்சிறுமிகள் எல்லா