பக்கம்:வைணமும் தமிழும்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருவகை ஞானங்கள்

245



'மாயனை'(5) என்ற ஐந்தாம் பாசுரத்தில் மாயனுடைய பல பெயர்களை வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூமலர்தூவித் தொழுதல் போய பிழைகளும் (எம்பெருமானை அடிபணிவதற்கு முன்னர் செய்யப்பட்டவை) புகுதருவான் நின்றனவும் (அடிபணிந்த பின்னர் ப்ரகிருதி வாசனையினால் அபுத்தி பூர்வமாகச் செய்தவை) தீயிலிட்ட து.ாசுபோல் உருமாய்ந்து ஒழியும் என்று கூறப்பட்டது.

(ii)ஆன்மாவின் இயல்பு : 'புள்ளும் சிலம்பின காண்' (6)என்ற பாசுரம் முதல் 'எல்லே! இளங்கிளியே' (5) என்ற பாசுரம்வரை உள்ள பத்துப் பாசுரங்கள் பள்ளி உணர்த்து வதையே பிரதானமாகக் கொண்டவை. இவை ஆன்மாவின் இயல்பான பகவதநுபவத்தையும், உறக்கமாகிய 2 urru a?GETIT) சொருபத்தையும் காட்டுவன. பரத்துவ திருக்குணமாத்திரமே விளங்கும் இடமான பரமபத நாதனை அநுபவிக்கப் பலகோடி நூறாயிரவர் திரளும்போது எல்லாத் திருக்குணங்களும் ஒருங்கே விளங்கும் இடமான கண்ணனை அதுபவிக்கக் கட்டம் அதனிலும் விஞ்சி இருக்க வேண்ட ாவோ? என்பதைக் காட்டுவது. பரமபோக்கியமான ஒரு பொருளை ஒருவனாக அநுபவிக்கலாகாது என்பதும் பத்துப் பேரோடும் அநுபவிக்க வேண்டும் என்பதும் சாத்திரவிதி.

கிருஷ்ணாதுபவத்தில் அனைவர்க்கும் அவா இருக்கும் போது எழுப்பச் சிலர் உறங்குவது அவாவிற்குக் குறை போல் தோன்றுகிறதே எனின் கண்ணபிரானது சேஷ்டி தங்களும் திருக்குணங்களும் இராமசரம்போல் சிலரை மயங்கப் பண்ணும்; சிலரை இருந்த விதத்தில் இருக்கவொட்டாமல் துடிக்கப் பண்ணும்; ஆகையால் அவாவிற்குக் குறை இல்லை