பக்கம்:வைணமும் தமிழும்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

261


ஆண்டாள் பாசுரங்களில் இந்நிலையைக் காணலாம். கண்ணன் இருக்கும் இடத்திற்கு தன்னைக் கொண்டு உய்க்குமாறு வேண்டும். (நாச் திரு. 12) பதற்றத்தை,

          மதுரைப் புறத்து
              என்னை உய்த்திடுமின் (1),
          ஆய்ப் பாடிக்கே
              என்னை உய்த்திடுமின் (2)
          நந்த கோபாலன்
              கடைத் தலைக்கே
          நள் இருட் கண்
              என்னை உய்த்திடுமின் (3)
          யமுனைக் கரைக்கு
              என்னை உய்த்திடுமின் (4)
          துவரா பதிக்கு
              என்னை உய்த்திடுமின் (9)

என்ற பாசுரங்களின் அடிகளில் கண்டு மகிழலாம். பராங்குச நாயகி (நம்மாழ்வார்) உருவெளிப்பாடு கண்டு பேசும்,

          என்நெஞ்சினால் நோக்கிக் காணிர்
              என்னை முனியாதே;
          தென்னன் சோலைத் திருக்குறுங்குடி
              நம்பியைநான் கண்டபின்
          மின்னும் நூலும் குண்டலமும்,
              மார்வில் திருமறுவும்,
          மன்னு பூணும் நான்குதோளும்
              வந்துளங்கும் நின்றிடுமே. (திருவாய் 552)