பக்கம்:வைணமும் தமிழும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீடுபேற்றிற்குரிய வழிகள்

265


        [ஐந்தும் ஐம்புலன்கள், ஆர்வம்- பக்தி; செவ்வே-
        நன்றாக கார்ஒத வண்ணனை கருங்கடல் நிறத்தினனை]

என்ற பூதத்தாழ்வாரின் பாசுரத்தில் பக்திநெறியைக் காணலாம். விஷ்ணுவை என்றும் தன் சித்தத்தில் வைத்திருக்கும் ‘விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரின்,

          மார்வம் என்பதோர் கோயில் அமைத்து
              மாதவன் என்னும் தெய்வத்தை நாட்டி
          ஆர்வம் என்பதோர் பூஇட வல்லார்க்கு
              அரவ தண்டத்தில் உய்யலும் ஆமே.
-பெரியாழ் திரு45.3

          [மார்வம் இதயம்; ஆர்வம்- பக்தி; அரவதண்டம் -
          யமதூதர்களால் வரும் துன்பம்]

என்ற பாசுரப்பகுதியில் இந்நெறியினைக் காணலாம்.

          பூகம் சாந்து என்நெஞ்சமே,
              புனையும் கண்ணி எனதுடைய
          வாச கம்செய்ய மாலையே;
              வான்பட்டாடையும் அஃதே;
          தேசம் ஆன அணிகலனும்
              என்கை கூப்பும் செய்கையே7
(திருவாய் 432)
          [சாந்து-சந்தனம்; கண்ணி - மாலை]

என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் அவருடைய பக்தி நிலையைக் கண்டு அநுபவிக்கலாம்.

மெய்விளக்க அறிஞர்கள் இப்பக்திநெறி கர்மயோகம், ஞானயோகம், பக்தியோகம் என்று மூன்று நிலைகளில் பயிற்சி அடையவேண்டிய நெறி என்றும் கூறுவர்.