பக்கம்:வைணமும் தமிழும்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

274

வைணவமும் தமிழும்


பக்தியோகம் முதலிய உபாயங்களை அநுட்டிக்க ஆற்றலற்ற தம்மிடம் அருள்புரிந்து அவ்வுபாயங்களிடத்தில் நின்று பலன் தருமாறு அவனை வேண்டுதல் இதுவாகும். ஐந்தாவது கார்ப்பண்யம் என்பது பக்தியோகம் முதலிய உபாயங்களில் தமக்கு அதிகாரம் இல்லாமையையும், எம்பெருமானைத் தவிர வேறு தெய்வத்தினிடமோ, வீடுபேற்றைத் தவிர வேறு பலனிலோ பற்றில்லாமையை அநுசந்தித்தல்; அவனது இவ்வதுசந்தாநத்தால் முன் தமக்கு இருந்த முனைப்பு ஒழியப் பெறுதல்; அல்லது எம்பெருமானின் கருணை தம்மீது வளர்ந்தோங்கும்படி தாழ்ந்து நின்று அஞ்சலி10 முதலிய வற்றைச் செய்தல் இது.

(அ). எந்தவித நியமும் இல்லை: இந்நெறியைக் கண்ணன் போர்க்களத்தில் பார்த்தனுக்கு உபதேசித்தமையால், இந்த நெறிக்கு தேச நியமம், காலநியமம் முதலியவரையறை இல்லை என்பது தெளிவு. பூர்வசன பூஷணமும்,

      ‘பிரபத்திக்கு தேச நியமும் கால நியமும் பிரகார நியமும்
      அதிகாரிநியமமும் பல நியமும் இல்லை' (24)

என்று குறிப்பிடுவது இக் கருத்தை அரண் செய்வதாக அமைகின்றது.

தேச நியமமாவது, தூய இடங்களில்தான் (புண்ணிய தலங்களில் தான்) செய்யவேண்டும், ஏனைய இடங்களில் செய்யலாகாது என்பது; காலநியமமாவது, வேனிற்காலம் முதலான காலங்களில்தான் செய்யவேண்டும், ஏனைய இடங்களில் செய்தலாகாது என்பது பிரகாரநியமமாவது.


10. அஞ்சலி - கைகளைக் கூப்புதல். அம் + ஜலயதி - அஜ்ஜலி. எம்பெருமானை நீர்ப்பண்டமாக உருகச் செய்தலால் இதற்கு இப்பெயர் வந்தது. இஃது ஒர் அடையாளமாகும்.